டிரெய்லர பாத்தே மிரண்ட பாலிவுட் நடிகர்...! கையில புடிக்க முடியல லோகேஷ் தம்பிய...!

by Rohini |
lokesh_main_cine
X

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ’விக்ரம்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் கதாபாத்திரத்தில் நடித்திருகின்றனர். மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் கூடிக் கொண்டே இருக்கின்றன.

lokesh1_cine

ஜூன் 3 ஆம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் முதல் சிங்கிள் பத்தல பத்தல பாடல் வெளியாகி ட்கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடலில் அரசியலை புகுத்தி கமல் புகுந்து விளையாடிருக்கிறார். அதனால் உண்டான கோபத்தால் கமல் மீது சமூக ஆர்வலர் ஒருவர் போலீஸில் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

lokesh2_cine

அதையெல்லாம் பற்றி கவலை கொள்ளாத கமல் படத்தின் இசைவெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடத்தினர். விழாவிற்கு திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரஜினி, சூர்யா, விஜய்க்கு அழைப்பு கொடுத்தும் அவர்களால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.

lokes3_cine

இந்த நிலையில் படத்தின் ஹிந்தி ட்ரெய்லர் பாலிவுட்டில் வெளியானது. அதைப் பார்த்து ஹிந்தி பிரபல நடிகர் ரன்வீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜை டேக் செய்து ட்ரெய்லர் தீயாய் இருக்கிறது என்பதை குறிக்கும் விதமாக ஃபையர் சிம்பலை போட்டு பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்து லோகேஷ் சந்தோஷத்தில் இருக்கிறார்.

Next Story