Connect with us

மீண்டும் ஷூட்டிங் கிளம்பிய லோகேஷ் – கமல்.! விக்ரம் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்.?

Cinema News

மீண்டும் ஷூட்டிங் கிளம்பிய லோகேஷ் – கமல்.! விக்ரம் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்.?

தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆயிற்று என்று தெரியவில்லை. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இந்த படம் மிக பெரிய வெற்றியடையும் நினைக்கும் படங்கள் எல்லாம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தவித்து வருகின்றன. அவர்களுக்கு தற்போது பெரிய நம்பிக்கையாக இருப்பது கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் தான்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதாலும், லோகேஷ் கமலின் தீவிர ரசிகர் என்பதாலும், இப்படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி ஹீரோக்கள் வில்லன்களாக நடித்துள்ளனர். அதுவும் இந்த பட எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

இந்த படம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வரும் 15ஆம் தேதி வெளியாக உள்ளது என கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், தற்போது ஒரு ஷாக்கிங் செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன் – சிவகார்த்திகேயன் மீது கடுப்பில் எஸ்.ஜே.சூர்யா.!? மேடையில் அப்பட்டமாக தெரிந்துவிட்டதே..!

அதாவது விக்ரம் பட குழுவினர் தற்போது மீண்டும் ஷூட்டிங் கிளம்பியுள்ளாராம். இதனை அறிந்த ரசிகர்கள் அப்போ இன்னும் ஷூட்டிங் முடியலையா ரிலீஸ் தேதி தள்ளிவைத்து விடுவார்களோ என கதிகலங்கி நின்ற நிலையில் அந்த செய்தியில்லை என தற்போது உறுதியாகியுள்ளது.

அதாவது, படத்தின் ப்ரோமோ காட்சிகளுக்காகஎடுக்கப்படும் காட்சிகள், ப்ரோமோ பாடல்களுக்கான ஷூட்டிங் தான் விரைவில் நடக்க உள்ளது. மற்றபடி பட ஷூட்டிங், எடிட்டிங், பாடல் பதிவு என எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன என்ற செய்தி தான் தற்போது வெளியாகியுள்ள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top