விக்ரம்-ல அந்த சீன் எடுத்தது சாண்டி தான்..! லோகேஷின் சீக்ரெட்டை உடைத்த விக்ரம் பட நாயகி...!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் விக்ரம். ரிலீஸாகி 3 வாரங்கள் கடந்த நிலையிலும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அந்த தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.
படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் , நரேன் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருதி இசையமைத்திருந்தார். பக்கா ஆக்ஷன் படமாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் படத்தில் சின்ன சின்ன ரோல்களில் முக்கிய டிவி நடிகைகள் நடித்திருந்தனர். விஜய் சேதுபதிக்கும் மூன்று மனைவிகளாக விஜே.மகேஸ்வரி, மைனா, ஷிவானி நாராயணன் போன்றோர் நடித்திருந்தனர். இந்த நிலையில் மகேஸ்வரி லோகேஷ் கனகராஜ் பற்றிய ஒரு ரகசிய தகவலை நம்மிடம் பகிர்ந்தார்.
லோகேஷுக்கு எப்பொழுது ரொமான்ஸ் வராது. அதனால் தான் அவர் எடுத்த படங்களில் பார்த்தாலே தெரியும். முழுவதும் ஆக்ஷன் படமாகவே இருக்கும். அப்படி ரொமான்ஸ் சீன் எடுத்தாலும் சிரித்து விடுவாரு. அதனால் தான் விஜய் சேதுபதியோடு எங்களோட ரொமான்ஸ் வரும் போது அந்த சீன்களை சாண்டி தான் பார்த்துக் கொண்டார். அப்போது கூட சாண்டி லோகேஷை ஏண்டா ரொமான்ஸ் சீன் ஒன்று கூடவா எடுக்க மாட்ட-னு கேட்பார் என்று மகேஸ்வரி கூறினார்.