Categories: Cinema News Entertainment News latest news

முதல் பாதி கமலை விட இவர்தான் அதிகமா வரார் –  விக்ரம் டிவிட்டர் விமர்சனம்

கமலுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஆக்‌ஷன் மாஸ் திரைப்படம். அதுவும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மேலும் இதில் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என முக்கிய நட்சத்திரங்கள் களம் இறங்கியுள்ளனர். இப்படி பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்திய விக்ரம் திரைப்படம் இன்று வெளியானது.

முதல் ஷோ முடிந்த நிலையில் இதுவரை நல்லப்படியான ரீவிவ்களையே பெற்று வருகிறது.நிறைய திரை விமர்சகர்களே படம் பிரமாதமாக இருப்பதாக கூறியுள்ளனர். படத்தில் கமலுக்கு பேரன் என ஒரு குழந்தை உள்ளது. அதற்கு முக்கிய கதாபாத்திரம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல் பாதி முழுவதும் பகத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இரண்டாம் பாதியில் இருந்து கமலுக்கு முக்கியத்துவம் அளித்து கதை செல்கிறது. இண்டர்வெல் ப்ளாக் பாகுபலி படத்திற்கு இணையாக இருப்பதாகவும் அனைவரையும் சிலிர்க்க வைப்பதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்கிற பெயரில் இடம்பெறுகிறார். அவரை வைத்தே விக்ரமின் மூன்றாம் பாகம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரமின் முதல் பாகம் கைதி என ரசிகர்கள் கூறுகின்றனர். அதற்கு தகுந்தாற் போல விக்ரமை பார்க்கும் முன்பு கைதியை பார்த்துவிடவும் என லோகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

ஆகவே வெகுநாட்கள் காத்திருந்ததற்கு தகுதியான படமாக விக்ரம் அமைந்துவிட்டது என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Published by
Rajkumar