இதுக்கு முன்னாடி கல்யாணத்துக்கு பாட்டு எழுதிட்டு இருந்தேன் - மனதை திறந்த விக்ரம் பாடலாசிரியர்

by Rajkumar |   ( Updated:2022-06-01 05:55:41  )
இதுக்கு முன்னாடி கல்யாணத்துக்கு பாட்டு எழுதிட்டு இருந்தேன் - மனதை திறந்த விக்ரம் பாடலாசிரியர்
X

வருகிற 3 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம், நீண்ட நாட்களுக்கு பிறகு உலக நாயகன் கமல் நடித்திருப்பதாலும், மேலும் அவரது ரசிகர் லோகேஷ் கனகராஜே இந்த படத்தை இயக்கி இருப்பதாலும் படத்திற்கு மக்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த படத்தின் முதல் பாடலாக ‘பத்தல பத்தல’ என்கிற பாடல் வெளியானது. இது மக்களிடையே அதிக ட்ரெண்ட் ஆனது.

பத்தல பத்தல பாடல் ஒரு குத்து பாடலாக இருந்தாலும், அடுத்து வந்த போர்க்கண்ட சிங்கம் என்கிற பாடல் முதல் பாடலை காட்டிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ஏனெனில் இந்த பாடலின் வரிகள் படத்தின் கதைக்கு அதிக தொடர்புடையதாக அமைந்துள்ளது.

vikram2_cineஇந்த பாடலுக்கான வரி விஷ்ணு என்பவர் எழுதியுள்ளார். அவர் இந்த பாடல் குறித்து பேட்டி ஒன்றில் கூறும்போது இதற்கு முன்பு தான் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பாடல்கள் எழுதி வந்ததாகவும், அதிர்ஷ்டத்தின் காரணமாகவே தனக்கு இந்த பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது என கூறியுள்ளார்.

மேலும் இந்த பாடம் சிறப்பாக வந்ததற்கு இசையமைப்பாளர் அனிருத்தும் முக்கிய காரணம் என அவர் கூறியுள்ளார்.

Next Story