Connect with us
banner

விக்ரம் படத்தின் அந்த பிரிண்ட் எப்போது வருமோ.?! காத்திருக்கும் ரசிகர்கள்.! இதுதான் கரணம்.!

Cinema News

விக்ரம் படத்தின் அந்த பிரிண்ட் எப்போது வருமோ.?! காத்திருக்கும் ரசிகர்கள்.! இதுதான் கரணம்.!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியாகி ரசிகர்களின் பேராதரவை  பெற்று வரும்  திரைப்படம் விக்ரம். அதிலும் கைதி திரைப்படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை பார்க்க வாருங்கள் என லோகேஷ் முந்தைய நாள் கூறி, விக்ரம்குறித்த எதிர்பார்ப்பை படம் கச்சிதமாக பூர்த்தி செய்துள்ளது என பலரும் கூறுகின்றனர்.

ஹாலிவுட் படங்களை போல தனக்கென தனி சினிமா உலகத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளார் என்று பலரும் கூறுகின்றனர். தொடர்ந்து தனது சினிமா உலகத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கைதி இரண்டாம் பாகம், விக்ரம் படத்தின் அடுத்த பாகம் என வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே ஒரு சிறிய வருத்தம் தான். அதாவது இந்த படத்திற்கு சென்சார் குழு U/A சான்று கொடுத்தது. அதற்கு காரணமாக பல்வேறு வன்முறை காட்சிகள் ‘கட்’ செய்யப்பட்டுள்ளதாம்.

இதையும் படியுங்களேன் – இவர் இப்படிப்பட்டவரா.?! உதவியாளரை வைத்து கெத்து காட்டிய லோகேஷ்.! என்கிட்ட நீ பேசவே கூடாது..,

அதிலும் குறிப்பாக, விஜய் சேதுபதி காட்சிகளுக்கு கத்தரி போட்டது சென்சார் குழு. இதன் காரணமாக படத்தை பார்த்த ரசிகர்கள் எப்போது OTTயில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அப்போதுதான் இந்த படத்தின் உண்மையான காட்சிகள் கட் செய்யப்படாமல் எந்தவித வார்த்தைகளையும் மியூட் செய்யாமல் படத்தின் சாயல் அப்படியே தெரியும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த படத்தை ஹாட்ஸ்டார் OTT தளம்தான் வாங்கியுள்ளது. எப்படியும் 30 நாள் கழித்து இந்த படத்தை OTTயில் ரிலீஸ் செய்து விடுவர். அப்போது அந்த காட்சிகள் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top