விக்ரம் படத்துக்காக காலில் விழுந்த பிரபல நடிகர்...அட இது தெரியாம போச்சே!....
விக்ரம் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்க நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மேலும் புது புது அப்டேட்ஸ்களும் இணையத்தில் வந்து குவிந்து கொண்டு இருக்கின்றது. படத்தின் புரோமோஷனுக்காக கமல், லோகேஷ் பல பேட்டிகளின் மூலம் படத்தை பற்றிய அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை பிடித்து படத்தை பற்றிய அப்டேட்ஸை கேட்டு வரும் நம் பத்திரிக்கை நண்பர்கள் அதில் பகத் பாசில் கேங்குகளில் ஒருவராக நடித்திருக்கும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீயை தொடர்பு கொண்டு பேசினார்கள்.
சின்னத்திரையில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஸ்ரீ. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘வானத்தை போல’ சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் ஏராளமான தொடர்களிலும் நாயகனாக நடித்துள்ளார். மேலும் பல படங்களில் கெஸ்ட் ரோலிலும் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
ஏற்கெனவே விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரு ஸ்கூலில் ரௌடிகளை விரட்டுவதற்காக விஜய்க்கு முன்னாடி இவர் தான் வருவார். விக்ரம் படத்தில் பகத் பாசில் கேங்குகளில் ஒருவராக நடிக்கிறாராம். சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போது 100 நாள் சூட்டில் நடிக்கும் படத்தில் நடித்தது எப்படி ? அது உங்கள் சீரியலில் பாதிப்பை ஏற்படுத்தவில்லையா? என்று கேட்க:
முதலில் தெறி படத்திற்கு அந்த மாதிரி பிரச்சினை இருந்தது. அதனால் என்னுடைய தவறினால் தான் அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்க முடிந்தது. ஆனால் இந்த படத்தில் சீரியலில் இருக்கும் கலைஞர்கள் எனக்கு உதவியாக இருந்தார்கள். மேலும் சீரியல் இயக்குனரிடம் போய் கேட்பேன் இல்லாவிடில் படக்குனு அவர் காலில் விழுந்துருவேன். இது ஒரு பெரிய பிராஜக்ட் படம் இல்லையா? அதனால் இரண்டிலுமே நான் ஈடு கொடுத்து தான் நடித்தேன் என்று கூறினார்.