விக்ரம் 3 படத்தில் அந்த மூன்று நடிகர்கள் வேண்டும்!...இந்த ரசிகை சொல்றத கேளுங்க..(வீடியோ).....
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீசாகி பாக்ஸ் ஆபீஸ் வசூலை அதிர வைத்து வரும் திரைப்படம் விக்ரம். விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பு இந்த படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்தாலும், சூர்யாவின் கடைசி சில நிமிட காட்சிகள் படத்தை அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பை கூட்டி விட்டது.
ஒவ்வொரு நாளும் இந்த படத்திற்கு அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிகமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது. விக்ரமின் முதல் நாள் விமர்சனம், இரண்டாவது நாள் மக்கள் கருத்து, மூன்றாவது நாள் மக்கள் கருத்து என போய்க்கொண்டே இருக்கிறது.
இதில், விக்ரம் படம் ரிலீசாகி ஐந்தாவது நாளான நேற்று ஒரு திரையரங்கில் நமது பத்திரிக்கையாளர்கள் ரசிகர்களின் கருத்தை கேட்டறிந்தனர். அப்போது பலரும் பலவிதமாக பாராட்டினார்.
ஒரு பெண் ரசிகை பேசுகையில் , ' அடுத்த பாகத்தில் சூர்யா இருப்பார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அதேபோல் கார்த்தி சாரும் இதில் இருக்கணும், விஜய் சாரும் இதில் கண்டிப்பா இருக்கணும். ' என தனது குறும்பு ஆசையை குறும்புத்தனம் மாறாமல் தெரிவித்தார்.
இதையும் படியுங்களேன் - விக்ரமில் அந்த பாட்டு நான் செஞ்சது.! புயலை கிளப்பிய ஹாரிஸ் ஜெயராஜ்.! அவரே கொடுத்த விளக்கம்...
உண்மையில் அப்படி நடந்தால் தியேட்டர் திருவிழா கோலமாக மாறிவிடும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஒருவேளை இதனை மனதில் வைத்து அடுத்த விஜய் படத்தில் ஏதேனும் சில மாற்றங்கள் செய்வாரா என்பதை அடுத்த அடுத்த அப்டேட் வரும்வரை எதிர்பார்த்து காத்து இருக்கலாம்.
மேலும், சிலர் விமர்சனங்களை கண்டு கொள்ளாதீர்கள். படம் அருமையாக இருக்கிறது என்று கூறினர். இன்னும் சிலர் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தினை நாங்கள் மறந்தே விட்டோம். விக்ரம் அந்த அளவுக்கு பாதிப்பை எங்களுக்குள் ஏற்படுத்தி விட்டது. என்று கூறி பூரிப்படைந்தனர்.