அஜித், விஜய் ரசிகர்களிடம் இருந்து escape ஆன சீயான் விக்ரம்...! எங்கிட்ட எல்லாம் உங்க பாட்சா பலிக்காது...!
தனக்கென ஒரு டிராக் அமைத்து அதில் எந்தவொரு பள்ளமும் இல்லாமல் தொடர்ந்து முன்னேறி போய்க்கொண்டிருக்கும் நடிகர் யாரென்றால் நடிகர் விக்ரம் தான். இவர் வழியே தனி வழிதான் என்பது போல நடிக்கும் படங்கள் எல்லாம் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிகர்களை பிரம்மாண்டத்தில் வீழ்த்துவார்.
ஆரம்பகாலங்களில் யாரோ என்று இருந்த இவர் சேது படத்திற்கு பிறகு யாருடா இவர்? என்று வியந்து பார்க்கும் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் என்றால் இவரின் கடும் முயற்சி, தன்னம்பிக்கைதான் கைகொடுத்தது என்று கூறலாம்.
எந்த கெட்டப் வேணும்? தயார வரேன் என்று உடம்பை ஏத்தவோ, குறைக்கவோ ரெடியா வந்து நிற்பார். அந்த அளவுக்கு சினிமா மீது இவரின் காதல் என்றே கூறலாம். இவரின் கோப்ரா படம் அனைரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. அடுத்ததாக ப.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் உங்களுக்கு அஜித் பிடிக்குமா? விஜய் பிடிக்குமா? என்று இவரிடம் கேட்க கொஞ்சம் கூட யோசிக்காமல் எனக்கு அஜித்தின் ஸ்டைல் பிடிக்கும், விஜய்யின் டான்ஸ் பிடிக்கும் என்று கூறி கிரேட்டா எஸ்கேப் ஆகிவிட்டார். பின்ன இவர் தான் பிடிக்கும் என்று சொன்னால் சும்மா விடுவார்களா?