என்கிட்ட உங்க பாட்ஷாலாம் பலிக்காது...! சீயானா யாரு..! மேடையில் நடிகையை வெளுத்து வாங்கிய விக்ரம்...

நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா பட புரோமோஷனில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி நடிக்கிறார். மேலும் அவரோடு சேர்ந்து மிருனாளினியும் நடிக்கிறார். படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தை தொடர்ந்து பொன்னியில் செல்வன் படமும் ரிலீஸ் ஆக இருக்கின்றது .அடுத்தடுத்து தன் பட வேலைகளில் பிஸியாக இருக்கும் விக்ரம் போற இடங்களெல்லாம் தனக்கே உரித்தான பாணியில் எல்லாரையும் கேலியும் கிண்டலுமாக செம ரகளை பண்ணிக் கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்கள் : இவங்களுக்கு இதே வேலையா போயிடிச்சு… முதலில் விஜய்.. இப்போ தனுஷ் சிக்கிட்டார்…
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த் பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட போது நடிகை ஸ்ரீநிதி நான் சின்ன வயதில் இருக்கும் போது அந்நியன் படம் பார்த்தேன். அதிலிருந்தே விக்ரம் கூட எப்படியாவது நடித்தாக வேண்டும் என ஆசை இருந்தது எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்கள் : சிவகார்த்திகேயன் கடனை அடைக்கும் சன் பிக்சர்ஸ்….பட் அந்த டீலிங் பிடிச்சிருக்கு!…..
இதை கவனித்துக் கொண்டு இருந்த விக்ரம் அடுத்து அவர் பேசும் போது நான் காலேஜ் படிக்கும் போது ஸ்ரீநிதி நடித்த கே.ஜி.எஃப் படம் பார்த்தேன். நான் இருக்கிற இடத்துல யாஷ் இருக்கிறார் என நினைக்கும் போது வலித்தது. எப்படியாவது இவங்க கூட நடிக்க்னும்னு நினைச்சேன். இப்போ என் கனவு நனவாகிவிட்டது என கூறி நான் சும்மா சொன்னேங்க பின்ன அவங்க மட்டும் சின்ன வயசுல அந்நியன் படம் பார்த்தேன் என்று சொன்னா நல்லா இருக்கானு சொல்லி ஸ்ரீநிதியை கலாய்த்து தள்ளினார்.