Connect with us

Cinema History

ஆக்ஷன் கதைகளில் அதகளப்படுத்தும் விக்ரம் பிரபு…! தமிழ்த்திரை உலக ரெய்டில் ஜெயிப்பாரா…?!

சமீபகாலமாக சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான டாணாக்காரன் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்த வருடம் இவர் கார்த்தி இயக்கத்தில் ரெய்டு படத்தில் நடித்துள்ளார்.

Raid

தயாரிப்பாளர் கனிஷ்க் மற்றும் மணிக்கண்ணன் பேசியதாவது, கன்னட படமான டக்கருவை நாங்கள் பார்த்த போது அதைத் தமிழில் ரீமேக் செய்ய முடிவு எடுத்தோம்.

ஆனால் அதற்கு முன் இயக்குனர் முத்தையா இதன் உரிமத்தைப் பெற்றுவிட்டார் என்பதை அறிந்தோம். ஆனால் நாங்கள் அவரை அணுகி பேசினோம். அப்போது விருமன் பட வேலைகளில் பிசியாக இருந்தார். அதனால் உடனடியாக ரீமேக் வேலைகளில் அவர் ஈடுபட முடியவில்லை.

அதனால் நாங்கள் விருப்பப்பட்டு அவரது அசிஸ்டண்ட் கார்த்தியை வைத்து படம் இயககினோம். இந்தப் படத்துக்கு வசனங்கள் எழுதுவதிலும் ஆர்வம் காட்டினார் கார்த்தி. இயக்குனரை நாங்கள் முதலில் பார்த்த போது அவர் மிகவும் இளமையாக இருந்தார்.

ஆனால் அவர் கதை சொல்லும்போது அதில் தான் ஒரு தேர்ந்த இயக்குனர் என்பதை நிரூபித்து விட்டார். கதையை நாங்கள் இறுதி செய்த போது இதில் நடிப்பதற்கு விக்ரம் பிரபு மிகச்சரியாகப் பொருந்துவார் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

அவரை அணுகி பேசிய போது அவர் உடனே சம்மதம் தெரிவித்தார். அவர் இதற்கு முன் பல ஆக்ஷன் படங்களில் நடித்துள்ளார். என்றாலும் இந்தப் படம் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

இந்தப் படம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவே அமையும். அவருடன் இணைந்து ஸ்ரீதிவ்யா ஜோடி சேர்ந்துள்ளார்.

Vikram Prabhu, Sridivya

நடிகை அனந்திகாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரிஷி, ரித்விக், சௌந்தரராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியானது. இதில் நடிகர் விக்ரம்பிரபு பேசும் வசனம் மிகவும் ஷார்ப்பாக உள்ளது. அதாவது பிரம்மன் உங்க தலையெழுத்த பென்ல எழுதியிருந்தா நான் கன்ல எழுதிருவேன்.

மீசை தாடி வச்சவன் எல்லாம் ஆம்பள இல்லடா… ஆம்பளன்னா ரத்தம் இருக்கணும்.. அதுவும் சுத்தமா இருக்கணும்… என்கிறார். இந்தப் படத்தில் மீசை, தாடி இல்லாமல் அரிவாள் சகிதமாக ஆக்ஷனைத் தெறிக்க விடுகிறார் விக்ரம்பிரபு.

படத்திற்கு சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் மிக விரைவில் வெள்ளித்திரைக்கு வர இருக்கிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top