புருஷன் படம் ரிலீஸ்.. ஆனா விக்ரம் மனைவியின் ஆசைய பாருங்க.. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியலயே

veera
தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். சேது படம்தான் இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்ட படமாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு விக்ரம் என்ற ஒரு மகா நடிகன் சினிமாவில் இருக்கிறான் என்பதை இந்த உலகிற்கு காட்டியது. அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து தூள், சாமி, தில் என அடுத்தடுத்து ஆக்சன் படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் .
அதன் பிறகு புதுப்புது அவதாரம் எடுத்து கமலுக்கு அடுத்தபடியாக வித்தியாசமான கெட்டப்புகள் போட்டு நடிப்பதில் தலை சிறந்த நடிகர் என்ற பெயரையும் வாங்கினார் விக்ரம். அதற்கு உதாரணமாக அந்நியன், ஐ ,கடாரம் கொண்டான் ,கோப்ரா போன்ற படங்களை குறிப்பிடலாம். கடைசியாக தங்கலான் திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் படம் ஏதோ ஒரு வகையில் சறுக்களை சந்தித்தது .இந்த நிலையில் தற்போது விக்ரம் வீரதீர சூரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் நாளை உலகெங்கிலும் ரிலீஸ்ஆக இருக்கின்றது. தூள் படம் மாதிரி இந்த படமும் ஒரு கமர்ஷியல் பேக்கேஜாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தூள் மாதிரியான ஒரு கதைக்களத்தில் விக்ரம் இந்த படத்தில் நடித்துள்ளார் .
அதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு இருந்து வருகிறது. வீர தீர சூரன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தான் மோகன்லால் நடிக்கும் எம்புரான் திரைப்படமும் ரிலீஸ் ஆகின்றது. அந்த படத்தை நடிகர் பிரித்திவிராஜ் சுகுமார் இயக்கியுள்ளார் .இந்த நிலையில் வீரதீர சூரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக கேரளா சென்றிருந்த விக்ரம் அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து நான் மோகன்லாலின் பெரிய ரசிகன் என்றும் என்னை விட என் மனைவி மோகன்லாலின் தீவிர ரசிகை என்று கூறியிருந்தார்.

empuran
அது மட்டுமல்ல நான் என்ன செய்தாலும் மோகன்லாலுக்கு ஈடாகுமா என்று கேட்பார் என் மனைவி என்றும் விக்ரம் தெரிவித்தார். நாளை வீர தீரன் சூரன் திரைப்படம் எம்புரான் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. இரண்டு படமும் நல்ல வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என விக்ரம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.