அவங்க மட்டும் நடிச்சிருந்தா ஓடி போயிருப்பேன்...! நடிகையை பாத்து பயந்த சீயான்..
தமிழ் சினிமாவில் மாபெரும் கலைஞனாய், நடிகராய், வெவ்வேறு தோற்றத்தில் மக்களை ரசிக்க வைக்கும் வித்தனாய் வலம் வருபவர் நடிகர் விக்ரம். படத்திற்கு படம் தன்னுடைய தோற்றங்களை மாற்றி கதையை மெருகேற்றும் மாபெரும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பகாலங்களில் இவரை ஒரு ராசியில்லாத நடிகர் என்று கூறிய அதே சினிமா தான் இன்று அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.
இவர் முதன் முதலில் என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அடுத்து வந்த மீரா என்ற திரைப்படம் தான் இவரை அடையாளம் காட்டியது. அந்த படத்தில் உள்ள “ஓ பட்டர்ஃபிளை” என்ற பாடலை இளசுகள் முதல் பெரியவர் வரை முணுமுணுத்து கொண்டு இருந்தார்கள்.
அந்த படத்தில் நடிகை லட்சுமி மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ஜோடியாக நடித்தார். வருடங்கள் பல ஆயினும் விக்ரமும் ஐஸ்வர்யாவும் நீண்ட வருடங்கள் கழித்து ஒரு படத்தில் இணைந்தார்கள். ஆனால் ஜோடியாக இல்லை. விக்ரமிற்கு மாமியாராக நடித்தார்.
விக்ரம் நடித்த சாமி-2 படத்தில் கீர்த்திக்கு அம்மாவாக நடித்திருப்பார். ஆரம்பத்தில் விக்ரம் ஐஸ்வர்யாவை பார்த்ததும் நல்ல வேளை மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தீர்கள், எனக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தால் சத்தியமா ஓடிப் போயிருப்பேன் என்று விக்ரம் கூறினாராம். ஏனெனில் இருவரும் மீரா படத்தில் ஜோடியாக நடித்ததை நினைவு கூர்ந்து இந்த மாதிரி கூறினாராம்.