சியான் விக்ரமுக்கு ஓர் நல்ல ராசி உண்டு. அதனை ராசி என்று கூறுவதை விட அது அவரின் உழைப்பு கிடைக்கும் தொடர் மரியாதை என்றே கூறலாம். ஒருவர் தனது தொழிலுக்கு உண்மையாக இருந்தால் அந்த தொழில் அவருக்கு தொடர்ந்து கை கொடுக்கும். அதற்கு ஓர் சிறந்த உதாரணம் விக்ரம்.
விக்ரம் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் அவரை தேடி தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கும். அதுவும் பிரமாண்ட பட்ஜெட் படங்கள் என்றால் விக்ரம் முதல் சாய்ஸ் என்று கூட சொல்லலாம்.
அப்படி தான், அந்நியன் , ஐ, கந்தசாமி, ராவணன் என பல படங்கள் உள்ளன. விக்ரம் படங்களில் அதிக பட்ஜெட் ஐ தான். சுமார் 80 கோடி பட்ஜெட் (தற்போதைய கணக்கு படி 150 கோடியை தாண்டும் )
இதையும் படியுங்களேன் – அஜித்திற்கு அடி பயங்கரம்.! ஆனா வெளியே காட்டிக்கல.! நேரில் பார்த்தவரின் ‘பகீர்’ தகவல்.!
தற்போது விக்ரம் நடித்து முடித்துள்ள கோப்ரா திரைப்படம் 87 கோடி ரூபாயம். இந்த படத்தை ஜமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். மாஸ்டர் , மகான் திரைப்பட தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார்.
87 கோடி ரூபாய் பட்ஜெட் அதனை OTT நிறுவனத்திடம் லாபம் வைத்து விற்க முடியாது. அதனால், தியேட்டருக்கு தான் கொண்டு செல்ல வேண்டும். அதனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பெரிய ஹீரோ படங்களே இங்கு குழாயடி சண்டை போட்டு வருகிறது. அதில் கோப்ராவை எந்த தேதியில் வெளியிடுவது என விழிபிதுங்கி நிற்கிறாராம் தயாரிப்பளார்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…