பொன்னியின் செல்வன் ரிலீஸ்-க்கு முன் இத செஞ்சே ஆகனும்...விக்ரமின் அதிரடியான முடிவு...
மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் உட்பட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து இசை வெளியீட்டு விழா வரைக்கும் அனைத்து வேலைகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தனர். இசைவெளியீட்டு விழாவிற்கு ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. படத்தை காண ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் விக்ரம் இன்று அவரது ட்விட்டர் பதிவில் பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வருவதற்கு முன் நாம் இதை செய்யவேண்டும் என திரிஷா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவிக்கு ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது நான் தஞ்சைக்கு போக இருக்கிறேன். நம் புலிக்கொடி நாடெங்கும் பறப்பதற்கு முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? அதனால் தான் போகிறேன். குந்தவை வருகிறாயா? வந்தியத்தேவனும் வருகிறான். வரும் போது அருள்மொழியையும் அழைத்து வா என ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.