விக்ரம் நடிச்சு ப்ளாப் ஆன படம்....! இயக்குனரின் இழப்பை ஈடுகட்ட நடிகை செஞ்ச காரியத்தை பாருங்க...

by Rohini |
vikram_main_cine
X

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களோடு பெரும் தோல்வியை தழுவியது. அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படம் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளது.

vikram1_cine

இந்த படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதற்கான புரோமோஷன் வேலைகளில் ஒட்டு மொத்த படக்குழுவும் தீவிரமாக இயங்கி கொண்டிருக்கின்றனர். மேலும் காப்பிய படமாக இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்புடன் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

vikram2_cine

இந்த நிலையில் விக்ரம் நடித்த தாண்டவம் படத்தில் நடந்த சில அனுபவங்களை படத்தின் இயக்குனரான ஏஎல்.விஜயின் தந்தையும் தயாரிப்பாளருமான அழகப்பன் பகிர்ந்துகொண்டார். தாண்டவம் படத்தில் நடிகர் விக்ரம், நடிகை அனுஷ்கா, நாசர், சந்தானம், ஏமி ஜாக்ஸன் போன்ற முன்னனி நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம். அந்த படத்தில் உள்ள பாடல்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. படத்தை இயக்கியவர் ஏஎல்.விஜய்.

இதையும் படிங்கள் : சிவாங்கி கொடுக்கும் குடைச்சல்!…கடுப்பாகும் கோலிவுட்…வளரும் நேரத்தில் இது தேவையா?…

vikram3_cine

ஆனால் படம் வசூலில் கோட்டை விட்டது. ஏதோ ஒரு காரணத்தால் சரியான லாபத்தை பெற முடியாமல் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. அப்போது சில பேர் படத்தில் நடித்த நட்சத்திரங்களின் சம்பளத்தில் குறைத்து விட்டால் நஷ்டத்தை ஈடு செய்யலாம் என ஏஎல். விஜயிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் விஜய்க்கு அதில் உடன்பாடே இல்லையாம். படத்தின் தோல்வியை நான் ஏற்றுக் கொள்கிறேன். என் சம்பளத்தை விட்டுக் கொடுக்கிறேன் என கூறியிருக்கிறார். ஆனால் நடிகை அனுஷ்கா தன் சம்பளத்தில் 25 சதவீதத்தை எடுத்துக் கொண்டு மீதியை சம்பளமாக கொடுங்கள் என கூறினாராம். அப்போது தான் இவர் கொடுத்ததை பார்த்தாவது மற்ற நட்சத்திரங்கள் கொடுக்க முன்வருவார்கள் என்று யோசித்து அனுஷ்கா அப்படி பண்ணியிருக்கிறார் என்று விஜயின் அப்பா அழகப்பன் கூறினார்.

Next Story