‘ஐ’ பட சூப்பர் ஸ்லிம் லுக்! அத பாத்தாலே எட்டடி தெறிச்சு ஓடிருவோம் - இதெல்லாம் எப்படி சாப்பிட்டாரு?
தமிழ் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்களை மகிழ்வித்து வருகிறார். விஜய் அஜித், ரஜினி கமல் என போட்டியெல்லாமல் இல்லாமல் எனக்கு என்று வழி இருக்கிறது. அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற வகையில் ஒரு இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம்.
விதவிதமான கெட்டப்களில் நடித்து தன்னுடைய திறமையை இந்திய அளவில் உயர்த்தி காட்டியிருக்கிறார். இந்திய சினிமாவில் விக்ரம் ஒரு தன்னிகரற்ற நடிகராகவும் இருந்து வருகிறார். இவர் நடிப்புக்கு தீனி போட்ட படங்கள் ஏராளம்.
இதையும் படிங்க : எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் பளார்விட்ட விஜயகாந்த்.. வன்மம் வளர்த்து பழிவாங்கிய வடிவேலு!..
அந்நியன், ஐ, கந்தசாமி, போன்ற படங்கள் எல்லாமே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அந்தப் படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தார். குறிப்பாக ஐ படத்தில் திடீரென மிகவும் மெலிந்த உடலுடன் தோன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் திகைத்திருப்பார்.
இந்த நிலையில் ஐ படத்திற்காக அவர் மெனக்கிட்ட சில விஷயங்கள் என்ன என்ன என்பதை பற்றிய செய்தி இணையத்தில் வைரலாகின்றது. அதாவது அரிசி உணவுகளை அரவே தவிர்த்தாராம் விக்ரம்.
பச்சைக் காய்கறிகள், பழங்கள் இவைகள் தான் விக்ரம் எடுத்துக் கொண்ட முக்கியமான உணவுகளாம். அதோடு சூப், எண்ணெய் இல்லாத பெப்பர் சிக்கன் இவைகள் சைடிசாம். இதனால் 84 கிலோவிலிருந்த விக்ரம் 14 கிலோ குறைந்து காணப்பட்டாராம்.
இதையும் படிங்க : பேர கேட்டதும் ‘அரோகரா’ என கேலி செய்த கும்பல்.. அப்ப கூட ரஜினி அதை மாத்தவே இல்லையாம்!..
இதை அப்படியே எடுத்து கொண்டதன் மூலம் க்ளைமாக்ஸ் காட்சிக்காக மேலும் 10 கிலோ குறைந்து மிகவும் ஸ்லிம்மாக வந்து நின்றாராம் விக்ரம். ஒரு படத்தின் கதை தேவைக்காக தன்னை எந்தளவுக்கு வருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறார் விக்ரம்.