என்னது விக்ரம் கஷ்டப்படுத்துனாரா..? அதுவும் இவர் முன்னாடி சொல்லி மாட்டிக்கிட்ட பாலா...

by Rohini |
bala_main_cine
X

பெரிய பெரிய மாஸான படங்களை கொடுத்து ஹிட் அடிக்க வைத்த இயக்குனர் பாலா அவர்கள். இவரின் படங்கள் என்றாலே கொஞ்சம் நடிகர்கள் அஞ்சதான் செய்வார்கள்.ஏனெனில் படத்தில் அந்த அளவுக்கு மெனக்கிடனும். ரியாலிட்டியா இருக்கனுனு நினைப்பார். மேலும் டூப் போட யோசிப்பார்.

bala1_cine

அப்படி இருந்தால் தான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும். இவரின் படங்களான சேது, நந்தா, நான் கடவுள், பரதேசி, அவன்இவன், தாரை தப்பட்டை போன்ற படங்கள் தர லோக்கலா கிராமம் சேர்ந்த வாசனையுடன் கொஞ்சம் அடிதடியும் கலந்து எடுக்கப்பட்ட படங்களாகும்.

bala2_cine

இதற்கெல்லாம் விதிவிலக்காக விக்ரம் மகம் துருவ் நடித்து வெளியான வர்மா படமும் இவர் எடுத்த ரொமான்டிக் கலந்த காதல் படமாகும். இவர் எடுத்த படங்களிலே இது முற்றிலும் வித்தியாசமான கதை. இந்த படத்தின் டீம் ஒரு விழாவிற்கு வந்திருந்த பொழுது பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

bala3_cine

துருவ் எப்படி கஷ்டப்படுத்துனாரா படப்பிடிப்பில் என்ற கேள்விக்கு இல்ல இல்ல விக்ரம் அளவுக்கு கஷ்டப்படுத்தல என விக்ரம் முன்னாடியே சொன்னார். பக்கத்தில் இருந்த விக்ரம் அவர்கள் இயக்குனர் சொன்னதும் தாமாஷாக அவரின் கழுத்தை இறுக பிடித்துக் கொண்டார். இதை பார்த்த மேடையில் உள்ளவர்கள் சிரித்துவிட்டனர்.

Next Story