செஞ்சி தள்ளிட்டான்.... இதுல இவன் புள்ள வேற...! விக்ரமை வெளுத்து வாங்கும் கே.ராஜன்...
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியில் எந்த வொரு இடையூறும் இல்லாமல் நகர்ந்து போய்க்கொண்டிருக்கும் முக்கியமான நடிகர் விக்ரம். ஆரம்பம் முதலே சில பல இடையூறுகளை தாண்டி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் இவரின் விடாமுயற்சியும் கடின உழைப்புமே காரணம்.
சேது என்ற படத்தின் மூலம் தான் தன் விஸ்வரூபத்தை காட்ட ஆரம்பித்தார். அந்த படம் இவரின் கெரியரில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படம். தொடர்ந்து பல படங்களில் நடித்து தன் திறமையை காட்டி வருகிறார். மேலும் படத்திற்காக தன் உடம்பை வறுத்திக் கொள்வதாக இருக்கட்டும் உடம்பை ஏற்றுவதும் குறைப்பதும் மனுஷன் கில்லாடி.
இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் அண்மையில் ஒரு பேட்டியில் விக்ரமை தன் வாய்க்கு வந்த படி திட்டியுள்ளார். அவர் கூறும் போது என்னதான் சினிமாவில் நடித்தாலும் அவன் பையிலிருந்து யாருக்காவது உதவினு பணம் கொடுத்திருப்பானா? ஒன்னும் பண்ணமாட்டான்.
சினிமானாலே பொது வாழ்க்கைதான். பொது வாழ்க்கைனு வந்து விட்டால் உதவினு கேட்டு வருகிறவர்களுக்கு உதவ வேண்டும். ஆனால் விக்ரம் யாருக்காவது எதாவது பண்ணியிருப்பானா? இதுல இவன் புள்ளையையும் சினிமாவிற்குள் அழைச்சுட்டு வந்துட்டான் என்று சரமாரியாக கேட்டுள்ளார்.