மணிரத்னம் மீது மனவருத்தத்தில் விக்ரம்..! ‘கோப்ரா’ மேடையில் வெளிச்சம் போட்டு காட்டிய சம்பவம்…

Published on: July 12, 2022
vikram_main_cine
---Advertisement---

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்த படம் 8 வது நூற்றாண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒர் வரலாறு காவியமாக உருவாகி வருகின்றது. இந்த படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர்.

vikram1_cine

இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலரும் நடிக்கின்றனர். அண்மையில் கூட படத்தின் டீஸர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. மேடையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த விதம் அனைவரையும் கவர்ந்தது.

vikram2_cine

ஆனால் முக்கிய கதாபாத்திரமான ஆதித்ய கரிகாலனாக நடித்த நடிகர் விக்ரம் மட்டும் இந்த விழாவிற்கு வரவில்லை. அன்று தான் அவரின் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சமூக வலைதளங்களில் அவருக்கும் மணிரத்னத்திற்கும் ஏதோ மனக்கசப்பு இருந்துள்ளதனால் தான் வரவில்லை. படத்தில் அவருக்கு மிகவும் குறைவான காட்சிகளே இருந்ததனால் விக்ரமிற்கு அதில் வருத்தம் இருந்துள்ளதனால் வரவில்லை எனவும் கூறிவந்தனர்.

vikram3_cine

ஆனால் மருத்துவமனையில் இருந்து விக்ரமின் உடல் நலம் பற்றிய அறிக்கையை பார்த்து அதன் பின் தான் நெட்டிசன்கள் அமைதியானார்கள். ஆனாலும் நேற்று கோப்ரா படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு வந்திருந்த விக்ரம் மேடையில் பேசும் போது சகஜமாக பேசினார். மேலும் எனக்கு ஒன்றுமில்லை. நான் நன்றாக தான் இருந்தேன். அதற்குள்ளாக நெஞ்சுவலி என்று எழுதி காமெடி பண்ணிட்டாங்க என சொல்லும் போது நல்லா இருந்தவர் பொன்னியின் செல்வன் விழாவிற்கு வந்திருக்கலாமே என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.