More
Categories: Cinema News latest news trailers

அதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது சார்… பாலிவுட் ஹீரோவை பந்தாடும் விஜய் சேதுபதி ரசிகர்கள்… வீடியோ உள்ளே…

கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் சேதுபதி , மாதவன் நடிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இதில் வேதாவாக விஜய் சேதுபதி நடித்து இருப்பார். விக்ரம் எனும் போலீஸ் அதிகாரியாக மாதவன் நடித்து இருப்பார்.

Advertising
Advertising

வேதா எனும் தாதா கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்தி இருப்பார்  விஜய் சேதுபதி. அதிலும், தாதாவாக மாறும் முன்னர் அவரது நடவடிக்கை, தாதாவாக மாறிய பின்னர் அவரின் மேனரிசம் என மிரட்டி இருப்பார் விஜய் சேதுபதி.

அந்த படத்தை அதே பெயரில் ஹிந்தியில் புஷ்கர் காயத்ரி ரீமேக் செய்கின்றனர். அதில், விக்ரமாக பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மற்றும் வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதையும் படியுங்களேன் – நான் யாரையும் செய்ய விட்டதில்லை… செஞ்சதும் இல்ல… ரேகா எதைப்பற்றி சொல்றங்கனு தெரியுதா.?!

இப்போது டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஹிந்தியில் ஹிருத்திக் அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். அது காட்சியில் நன்றாக இருக்கிறது . இருந்தாலும், தமிழில் விஜய் சேதுபதி வேதாவாக வாழ்ந்து இருப்பார் . அதனால், தமிழ் ரசிகர்களால் வேதாவாக வேறு யார் நடித்தாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதே உண்மை.

Published by
Manikandan

Recent Posts