தளபதி விஜயும், சியான் விக்ரமும் நேருக்கு நேர் தனது திரைப்படங்கள் மூலம் ஏழு முறை மோதியுள்ளனர். அதில் ஒரே வருடத்தில் மட்டும் மூன்று முறை தங்களது படங்களை நேருக்கு நேர் களம் இறக்கி பலப்பரீட்சை நடத்தி உள்ளனர். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
முதன்முதலாக 2001 தீபாவளி அன்று விக்ரம் நடித்த காசி திரைப்படமும், விஜய் நடித்த ஷாஜகான் திரைப்படமும் வெளியானது. இதில் காசி திரைப்படத்திற்கு விக்ரமின் நல்ல நடிப்பின் மூலம் பலத்த வரவேற்பு கிடைத்தது. ஷாஜகான் திரைப்படம் விஜய் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட்டாகவில்லை. அந்த படத்தின் காமெடி மட்டுமே நன்றாக இருந்தது.
அடுத்ததாக சியான் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படமும், தளபதி விஜய் நடித்த தமிழன் திரைப்படமும் 2002ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இதில் சொல்லவே தேவையில்லை ஜெமினி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது வரை இப்படம் பலரது ஃபேவரைட். தமிழன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அடுத்ததாக அதே வருடம் ஜூலை மாதம் ஒரு வாரம் இடைவெளியில் முதலில் விக்ரமின் சாம்ராய் திரைப்படமும், அடுத்ததாக விஜயின் யூத் திரைப்படமும் வெளியாகி இருந்தது. இதில் யூத் திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது. சாமுராய் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்களேன் – ரகசியமாக நடந்த விஜயின் அதிரடி நகர்வு.!? இதெல்லாம் கோடிகளில் புரளும் வியாபாரமாச்சே..?
2003 ஆம் வருடம் பொங்கல் தினத்தில் விக்ரம் நடித்து, தரணி இயக்கத்தில் தூள் திரைப்படம் வெளியாகி இருந்தது. அதே தினத்தில் தளபதி விஜயின் வசீகரா திரைப்படம் வெளியாகி இருந்தது. வசீகரா திரைப்படம் தற்போது வரை ஒரு நல்ல படமாக இருந்தாலும், அந்த சமயம் தூள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால் வசீகராவின் வரவேற்பு குறைந்து போய்விட்டது.
அடுத்து அதே வருடம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு விக்ரமின் காதல் சடுகுடு, புதிய கீதை எனும் விஜய் திரைப்படமும் வெளியாகி இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.
இதையும் படியுங்களேன் – மச்சானை நம்பி மலையேறிய அருண் விஜய்.! அதிர்ச்சியில் உறைந்து போன தயாரிப்பாளர்கள்.!
அடுத்து அதே வருடம் தீபாவளியை முன்னிட்டு பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் வெளியாகியிருந்தது. அதேபோல் விஜய் முழுக்க முழுக்க ஆக்சன் அவதாரத்தில் நடித்திருந்த திருமலை திரைப்படமும் வெளியாகி இருந்தது. இதில் பிதாமகன் திரைப்படம் நல்ல விமர்சனத்தையும், நல்ல வெற்றியையும் பதிவு செய்தது. அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக திருமலையும் நல்ல கமர்சியல் வெற்றியை கொடுத்தது.
அடுத்ததாக 2005 தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் சிவகாசி திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அதேபோல் விக்ரம் நடிப்பில் மஜா திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் சிவகாசி திரைப்படம் அதிரடியான வெற்றியை கொடுத்தது. மஜா திரைப்படம் ஒரு நல்ல திரைப்படம் சிவகாசி அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு வெற்றி பெற்றது.
ஐயப்பனை கொச்சைப்படுத்தும்…
நடிகர் சூர்யாவை…
பைரவி படத்தின்…
அமரன் திரைப்படம்…
Rajinikanth: நடிகர்…