பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற விக்ரனமனுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெற்றி பெறவில்லை என்றவுடன் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்னர் பிக் பாஸ் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் பல குற்றச்சாட்டுக்களை ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தன்னுடைய பணத்தில் ஐபோன், அப்பிள் வாட்ஸ் என பல பொருட்களை வாங்கிக்கொண்டதோடு மட்டுமில்லாமல், விக்ரமன் அவர் வாங்கிய காருக்கு தன்னை இஎம்ஐ செலுத்த வற்புறுத்தியதாகவும் அடுக்கடுக்காக பல குற்றதச்சாட்டுக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முன்வைத்துள்ளார் வழக்கறிஞர் கிருபா முனுசாமி.
மேலும் புதிதாக யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என்றும் அதற்காக ஆப்பிள் லேட்பாப் வாங்கி தரும் படி அவர் கேட்டதாகவும், ஆனால் தான் வாங்கிகொடுக்க மறுத்து விட்டதாகவும் கிருபா முனுசாமி தெரிவித்துள்ளார். கூடவே அவர்களின் உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் விக்ரமனுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வழக்கறிஞர் கிருபா முனுசாமி பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க :தமிழ் ஹீரோலாம் இப்படி நடிப்பாங்களா?.. நான் ஏன் நடிக்கணும்!. படப்பிடிப்பில் அடம்பிடித்த மம்முட்டி..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…