More
Categories: Cinema News latest news

வீண் பிடிவாதத்தால் விக்ரமன் கொடுத்த தோல்வி படம்… ஆனா கடைசியில நடந்ததுதான் ஹைலைட்!

பல சென்ட்டிமென்ட்கள் அள்ளும் படங்களால் ரசிகர்களின் மனதை உருகவைத்த இயக்குனர் விக்ரமன், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வலம் வந்தவர். “புது வசந்தம்”, “சூர்ய வம்சம்”, “வானத்தை போல”, “உன்னை நினைத்து” போன்ற காலத்துக்கும் நிற்கும் கிளாசிக் திரைப்படங்களை கொடுத்தவர். குறிப்பாக “சூர்ய வம்சம்” திரைப்படம் இப்போதும் மிகவும் டிரெண்டிங்கான திரைப்படமாக இருக்கிறது. 5 நிமிட பாடலில் கதையின் கதாப்பாத்திரங்கள் தங்களது வாழ்வில் முன்னேற்றம் அடைவது போன்ற டிரெண்ட்டை தொடங்கி வைத்தவர் இவர்தான்.

Advertising
Advertising

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, விக்ரமன் குறித்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் பரத், ஜெனிலியா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “சென்னை காதல்”. இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு இயக்கியிருந்தார். இத்திரைப்படம் விக்ரமன் பாணியிலான திரைப்படத்தில் இருந்து சற்று வித்தியாசமாக இருந்தது. எனினும் இத்திரைப்படம் படுதோல்வியடைந்தது.

இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு விக்ரமன், இரு நண்பர்களை அடிப்படையாக வைத்து ஒரு கதையை கூறினாராம். அந்த கதை கலைப்புலி எஸ்.தாணுவிற்கு மிகவும் பிடித்துப்போனது. ஆனால் விக்ரமன், “என்னிடம் இன்றைக்குள்ள இளைஞர்களை கவரும் வண்ணம் ஒரு கதை இருக்கிறது” என்று “சென்னை காதல்” கதையை கூறினாராம்.

அதற்கு எஸ்.தாணு, ‘இந்த கதை அவ்வளவாக சுவாரஸ்யமாக இல்லை. ஆனால் அந்த நண்பர்களை அடிப்படையாக வைத்து கூறிய கதை நிச்சயமாக வெற்றிபெறும். எனினும் உங்களுக்காக சென்னை காதல் கதையை படமாக்கலாம். நீங்கள் விரும்புகிறீர்கள் என்றுதான் நான் இதனை தயாரிக்கிறேன். ஆனால் எனக்கு அந்த கதைதான் பிடித்திருக்கிறது” என கூறினாராம்.

எஸ்.தாணு கணித்தது போலவே “சென்னை காதல்” திரைப்படம் தோல்வியடைந்தது. படம் வெளியான பின்பு விக்ரமனுக்கு சேர வேண்டிய 16 லட்ச ரூபாயை அவரிடம் கொடுக்க சென்றுள்ளார். ஆனால் விக்ரமன், “உங்களுக்கு பிடிச்ச கதையை எடுக்காம இருந்தது என்னுடைய தப்பு. எனக்காக நான் விரும்புன கதையை நீங்க எடுத்தீங்க. அதனால்தான் உங்களுக்கு இந்த இழப்பு. இந்த இழப்புக்கு நான்தான் காரணம். ஆதலால் இந்த பணம் எனக்கு வேண்டாம்” என எஸ்.தாணுவிடமே திரும்பக்கொடுத்துவிட்டாராம்.

Published by
Arun Prasad

Recent Posts