More
Categories: Cinema History Cinema News latest news

படத்தை பாழாக்கிய இயக்குனர்.. மனம் நொந்து ஒரு நாள் முழுக்க அழுத விக்ரம்..

vikram

சீயான் விக்ரம் தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக விளங்குகிறார். இவர் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் ஆரம்ப காலத்தில் நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் ஆவார். தன் திரைப்பட பயணத்தை தொடங்கிய போது தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த விக்ரம் தமிழ் சினிமாவில் நல்லதொரு கதாநாயகனாக அடையாளப்படுத்தப்பட்ட படம் சேது. இப்படத்தை அறிமுக இயக்குனர் பாலா இயக்கியுள்ளார் . கதாநாயகியாக அபிதா மற்றும் சிவக்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.

vikram

படம் அன்றைய காலகட்டத்தில் வந்த மாறுபட்ட கதைகளத்தில் அமைந்த படமாகும். தன் உடலை வருத்தி மொட்டை அடித்துக் கொண்டு உடல் இளைத்து கடுமையாக உழைத்து நடித்தார் விக்ரம். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் போல் படம் வெற்றியும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகனாக நிலை நிறுத்தியது இப்படம். அப்படி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தவர் பாலா . இருவரது வாழ்க்கையிலும் திருப்புமுனையாக அமைந்தது இப்படம். பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் பிதாமகன் எனும் எனும் படத்தில் இணைந்தார்கள். இதுவும் விக்ரமிற்க்கு வித்தியாசமான தோற்றத்தில் வேறு விதமான கதை களத்தில் அமைந்த படமாகும் இதுவும் வெற்றி படமாக அமைந்தது.

Advertising
Advertising

BALA

இப்படி பாலா தனது வித்தியாசமான கதைகளத்தில் விக்ரமை நிலை நாட்டி அவரை முன்னணி நடிகராக வளர்ச்சி பாதைக்கு வித்திட்டவர் பாலா. பாலா விக்ரமின் ஆஸ்தான இயக்குனர் ஆவார். அதனால் தான் மகனான துருவ் விக்ரமையும் தமிழ் சினிமாவில் பாலா தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்தார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் அர்ஜுன் ரெட்டி என்னும் ரொமான்டிக் படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி பெற்றது.

dhuruv 2

இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்த விக்ரம் தனது மகனான துருவ் விக்ரமை வைத்து எடுத்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த நினைத்தார். இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்றும் நினைத்தார். இதனை பாலா தான் இயக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார் விக்ரம். பின்பு பாலா மீது முழு நம்பிக்கை வைத்து தனது நண்பரை வைத்து இப் படத்தை தயாரித்தார்.

dhuruv 2

படப்பிடிப்பு நடந்து சில நாட்கள் கழித்து படத்தின் முதல் பகுதியை விக்ரம் மற்றும் அவரது நண்பர் இருவரும் பார்த்தனர். படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை வேறு ஏதோ கதைகளத்தில் காட்சி அமைப்பு மிகவும் மோசமாகவும், ஆபாசமாகவும் படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தை முழுமையாக பார்க்காமல் விக்ரம் மற்றும் அவரது நண்பர் பாதியில் இருந்து சென்றார்கள்.

dhuruv 2

பின்னாடி அமர்ந்திருந்த பாலா கால் மீது கால் போட்டு கொண்டு புகைப்பிடித்துக் கொண்டு முகத்தில் எந்தவித ரியாக்ஷனும் இன்றி அமர்ந்திருந்தார். தனது மகனை ஆபாச நடிகராக சித்தரித்ததை பார்த்து மனம் நொந்து ஒரு நாள் முழுக்க அழுதுள்ளார் விக்ரம். பின்பு தயாரிப்பாளர் தனது நண்பர் என்பதால் ”பணத்தைப் பற்றி கவலை இல்லை நாம் முதலில் இருந்து ஆரம்பித்து நல்ல படத்தை எடுக்கலாம்” என்று ஆறுதல் கூறினார். பின்பு ஸ்கிரிப்ட் மாற்றி அமைத்து தனது வேறொரு இயக்குனர் மூலம் ஆதித்யா வர்மா என்ற படத்தை எடுத்து முடித்தார் விக்ரம்.

Published by
Sathish G

Recent Posts