Connect with us
ஆதித்ய கரிகாலன்

Cinema News

கேள்வியா கேட்குற இந்தா வாங்கிக்கோ..! தெறிக்கவிட்ட ஆதித்ய கரிகாலன்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காவியமாக மாறி இருக்கிறது பொன்னியின் செல்வன். இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் பேசி ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

தமிழில் மிகப்பெரிய நாவலாக இருப்பது பொன்னியின் செல்வன். இக்கதையை பலரும் படமாக இயக்க பூஜை வரை போட்டாலும் எதுவும் நடக்கவில்லை. ஆனால் இயக்குனர் மணிரத்னம் தனது பல வருட லட்சியத்தை முடித்து விட்டார். படமும் இரண்டு பாகங்களாக தயாராகி விட்டது. வரும் 30ந் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம். குந்தவை பிராட்டியாராக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து, பட ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு பிஸியாக இயங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் விக்ரம், ஜெயம் ரவி, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் விக்ரம் பேசும் போது, பலருக்கு பல துறைகளில் ஆர்வம் இருக்கும். ஆனால் நான் மிகவும் முக்கியமாக நினைப்பது வரலாற்றை தான். குழந்தைகளாக நாம் இருந்த போதே, சந்தமாமா கதைகளை அதிகம் சொல்லி நமது முன்னோர்கள் குறித்து நாம் தெரிந்து வைத்து இருப்போம். மன்னர்களைப் பற்றிய கடந்த காலக் கதைகளைச் சொன்னார்கள். நாம் பிரமீட்களை பற்றி பேசுகிறோம். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு கோயில்களை எப்படி கட்டினார்கள் என உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் எத்தனையோ கோவில்கள் உள்ளன.

ஆதித்ய கரிகாலன்

மிக உயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோயில் தஞ்சாவூரில் உள்ளது. அது சோழ வம்சத்தை சேர்ந்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. அந்த கோயிலின் உச்சி கோபுரம் ஒரே கல்லால் கட்டப்பட்டது. 80 கிலோ டன்களை கொண்டது. சமீபத்தில் ஒருவர் பேசுவதை கேட்டேன். கட்டப்பட்டு சாய்ந்து இருக்கும் கோபுரத்தை பார்த்து வாவ் எவ்வளோ அழகா இருக்கு என சிலர் கூறுகின்றனர். அதை பார்த்து வியக்கின்றனர். ஆனால், எங்களிடம் இருக்கும் கோயில் 1000 வருடம் ஆனாலும் சாயவும் இல்லை.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கும் ட்விஸ்ட்…! அந்த நடிகரின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி….

எந்த பிடிமானமும் இல்லாமல் தாங்கி நிற்கிறது. அந்த கல்லை 6 கிலோ மீட்டர் எந்தவித நவீன வசதியும் இல்லாமல் யானை, மக்களை கொண்டு இழுத்து வந்தனர். அதை சரியாக பொருத்தி எந்தவித சேதமும் இல்லாமல் அமைத்தனர். 6 நிலநடுக்கத்தை சந்தித்தாலும் பிடிமானம் கூட இல்லாமல் தாங்கி நின்றது. ராஜராஜ சோழன் தனது காலத்தில் 5000 அணைகளை கட்டினார். தண்ணீருக்கான அமைச்சகத்தை உருவாக்கினார்.

இதை தான் நாம் அதிகமாக தெரிந்து கொள்ளவேண்டும். இன்னும் ஏராளமான விஷயங்களை செய்தார். இவையனைத்தும், 9வது நூற்றாண்டில் நடந்தது. உலகமே நம் முன்னோர்கள் பற்றி தற்போது பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நம்மிடம் தான் பெரிய கடல்வழி தடங்கள் இருக்கிறது. தென்னிந்தியா, வட இந்தியா என எல்லாம் இல்லை. நாம் அனைவரும் இந்தியர்கள் என்று தான் பெருமையாக இருக்க வேண்டும் எனக் கூறினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top