Cinema News
‘இனி நடிக்க மாட்டேன்’… 37 வயசுல ‘இப்படி’ ஒரு முடிவா? ரசிகர்கள் அதிர்ச்சி!
உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட திரையுலகில் ஒவ்வொருவரும் ஒரு சிறிய வேடம் தங்களுக்கு கிடைக்காதா? என ஏங்கித் தவிக்கின்றனர். இளைஞர்கள் வாய்ப்பு கிடைக்காமல் இருக்க, சிலர் 80 வயதுக்கு மேலும் நடித்து வருகின்றனர். சினிமா ஒரு மாய உலகம் என்று சொன்னாலும் மக்களுக்கு இந்த ஓடிடி காலத்திலும் அதன்மீதான கவர்ச்சி சிறிதும் குறையவில்லை.
இந்தநிலையில் 37 வயதில் ஒரு நடிகர் தன்னுடைய ஓய்வினை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். 12th பெயில் புகழ் விக்ராந்த் மாஸ்ஸி தான் அது. கடந்த 2009ம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது 12th பெயில் மூலமாக நல்ல அங்கீகாரம் பெற்றிருக்கிறார். இதனால் இவரது படங்களுக்கு என ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.
இந்தநிலையில் இன்ஸ்டாகிராமில் விக்ராந்த், ‘ கடைசி சில வருடங்களை என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் என்மீது அன்பு வைத்து எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றிகள். வீட்டுக்கு செல்ல இதுவே தருணம் என்று நான் உணர்கிறேன். தற்போது நடித்து வரும் 2 படங்களுடன் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
என்மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி. எனக்கென மனைவி, மகன் உள்ளனர். மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்,’ என தெரிவித்து இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் தன்னுடைய முடிவை வாபஸ் பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜிவி காட்டுல மழையா இருக்கே… அடுத்த படம் இந்த பெரிய ஸ்டாரோட தானாம்!..