உருட்டும் விழிகளுடன் மிரட்டும் பாவனைகளைக் காட்டும் இந்த கொடூர வில்லன் நிஜத்தில் பரம சாதுவாம்...!

by sankaran v |
உருட்டும் விழிகளுடன் மிரட்டும் பாவனைகளைக் காட்டும் இந்த கொடூர வில்லன் நிஜத்தில் பரம சாதுவாம்...!
X

MN Nambiyar4

மாஞ்சநேரி நாராயணன் நம்பியார் இது தான் எம்.என்.நம்பியாரின் மூலக்கதை. தமிழ்த் திரைப் படங்களில் வில்லனையும் முதன் முதலில் ரசிக்க வைத்தவர் எம்.என்.நம்பியார்.

7 தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். வில்லனாக யார் நடிக்க வந்தாலும் அதற்கு இவர் தான் ஒரு வடிவமாக உள்ளார். மக்கள் திலகம் எம்ஜிஆருடன் பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.

Nambiyar

கைகளை பிசைந்தபடி கண்களை அகல விரித்து இவர் பேசும் வசனம் நமக்கு மரணபயத்தையே உண்டுபண்ணிவிடும். ஆரம்ப காலகட்டங்களில் நாடகங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

அங்கு குறைந்த ஊதியம். அது மட்டுமல்லாமல் பெரும்பாலும் சமையல் வேலையே கொடுக்கப்பட்டது. அதனால் நாடக உலகிலிருந்து விலகி ராணுவத்தில் சேர்ந்து விடலாமா என யோசித்தார். 48 நாள்கள் விரதமிருந்து ஆண்கள் சபரிமலை செல்வது போல பெண்களும் சென்றால் ஆண்களின் சபலத்திற்குத் தான் வழிவகுக்கும்.

Nambiyar3

அதனால் பெண்கள் செல்வதைத் தவிர்க்கலாம் என கூறினார். பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் மாதவிடாய் காலத்தைக் கடந்து தொடர்ச்சியாக 48 நாள்கள் விரதமிருப்பது சாத்தியமற்றது என்றார். கோபம் என்றால் என்னவென்றே தெரியாது. அந்த அளவுக்கு எளிமையான மனிதராகவே நம்பியார் இயல்பாக வாழ்ந்து வந்தார்.

உண்மையிலேயே பரம சாது நம்பியார். அதை வெளிப்படுத்தும் விதத்தில் பின்னாளில் அய்யப்ப பக்தராக பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்புகளில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை அனைவரின் முன்னிலையில் வீட்டுக்கு வந்து பகிர்ந்து கொள்வார். அதை அப்படியே சொல்லாமல் நகைச்சுவையாக பேசி ரசிக்கும் விதத்தில் சிரிக்க வைப்பாராம். தீய பழக்கங்கள் எதுவும் இல்லாத இவர் வருடத்தில் 2 மாதங்கள் மட்டும் புகைபிடிப்பாராம்.

M.N.Nambiyar

கவலையே இல்லாத மனிதராக வாழ்ந்து வந்த நம்பியார் நிழலில் வில்லன். நிஜத்தில் ஹீரோ. சைவ உணவை மட்டும் சாப்பிடுவார். நம்பியார் மனதளவில் கூட யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டார். பக்த ராமதாஸ் இவரது முதல் படம். கடைசி படம் சுதேசி. இவர் மொத்தம் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என பல வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். 89வது வயதில் பாக்டீரியா தொற்றால் அவதியுற்ற இவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2008ல் இறந்தார். கடைசி வரை அரசியல் மேடைகளில் ஏறாதவர் நம்பியார்.

எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவைத் தெரிவிக்கவில்லை. வெளியூர் படப்பிடிப்புக்குச் சென்றால் தனது மனைவியையும் அழைத்துச் சென்று அவர் கையாலேயே சமைத்த உணவை சாப்பிடுவாராம். தனது பிள்ளைகளை திரைப்படத்தில் நடிக்க வைக்க அவர் ஒருநாளும் விரும்பியதில்லை. 2012ல் நம்பியாரின் மனைவி ருக்மணியும், மகன் சுகுமாறன் நம்பியாரும் உடல் நலம் குன்றி இறந்தனர்.

Next Story