முதல் ஹீரோ படம்... ஆனாலும் டைட்டிலில் பெயரை விட்டுக் கொடுத்த ரஜினி... அட பெரிய மனசுதான்!..
Rajinikanth: தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன பிரச்னையை சந்தித்து வந்தாலும் ரஜினிகாந்த் எப்போதுமே தன்னுடைய சகாக்களை மதிப்பவர். அவர்களுக்கு தேவையானதை செய்யும் போது தன் இடத்தினை விட்டுக்கொடுக்க கூட தயங்கவே மாட்டாராம். அப்படி ஒரு சம்பவம் தான் ஒருமுறை நடந்ததாம்.
80களில் ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்த சமயம் அவரின் திரைப்படங்களில் எல்லாம் வில்லனாக அப்போது ஹிட்டில் இருக்கும் இன்னோரு நடிகரை களமிறக்குவார்கள். முத்துராமன், ஜெய்சங்கர் என அவருடன் வில்லனாக மோதி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தனர். இதை வழக்கமாக பல படங்களில் செய்தனராம்.
இதையும் படிங்க: சென்னை ரசிகர்களை சந்தித்த விஜய்!.. அட எங்கேன்னு பாருங்க!.. கோட் சூட்டிங் ஸ்பாட் இனி அனல் பறக்குமே!..
எம்.பாஸ்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் பைரவி. இப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ரீப்ரியா, ஸ்ரீகாந்த், சுருளி ராஜன், வி.கே.ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாகி இருப்பார் ஸ்ரீகாந்த். முதலாளியாக நினைக்கும் போது அடக்கமாக நடித்து இருப்பார்.
அதுவே தன் தங்கையை கொன்ற கொலைக்காரன் என்று தெரிந்தவுடன் அவரை விரட்டிக் கொல்லும் போது அவ்வளவு தத்ரூபமாக அந்த கேரக்டரில் தன்னை மாற்றி கொண்டாராம். அதுவும் அவர் கிளைமேக்ஸில் பேசிய வசனங்கள் எல்லாம் திரையரங்குகளில் கைத்தட்டல்களை அள்ளியதாம். ஒற்றை கால் இல்லாதவராக நடித்தார்.
இதையும் படிங்க: கமலின் செண்டிமெண்ட் இந்தப் படத்திலும் ஒர்க் அவுட் ஆகுமா? ‘அமரன்’ பேருக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா
அதற்கு ஒற்றை காலில் கட்டையை கட்டிக்கொள்வார். அதை வைத்துக்கொண்டு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில், காரமடையில் பாறைகளுக்கு இடையே சிரமத்துடன் நடித்திருந்தாராம். அந்த படத்தில் நடிக்கும் போது ஸ்ரீகாந்தும் பிரபல நடிகராகவே இருந்தார். நிறைய படங்களில் நடித்தும் வந்தார்.
அப்படி மூத்த நடிகரை வில்லனாக்கியதால் கொஞ்சம் சங்கடப்பட்ட ரஜினிகாந்த் அவரை முதல் பெயராக படத்தின் டைட்டில் கார்டில் போட வேண்டும். என் பெயர் அடுத்து வந்தால் போதும் என தயாரிப்பு தரப்பிடம் கேட்டுக்கொண்டாராம். அதைப்போல படத்தில் முதலில் ஸ்ரீகாந்த் பெயர் வந்ததாம். அப்போதே தன் மீது அவருக்கு இருந்த தைரியம் அதிகம் என்கின்றனர் அவர் சகாக்கள்.