அந்த வலி எனக்கு மட்டும்தான் தெரியும்!...இன்னும் அதை மறைக்கலயா அஜித்?...

வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.
உண்மையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க வினோத் விரும்பியது கைதி மற்றும் மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ் அல்லது மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டோவினோ தாமஸ் இருவரின் ஒருவரைத்தான். ஆனால், சில காரணங்களால் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என உறுதி செய்யப்பட்டது.
ஆனாலும், வினோத்துக்கு ஏனோ கார்த்திகேயா மீது திருப்தி ஏற்படவில்லை. எனவே, அஜித்திடம் கார்த்திகேயனை தூக்கிவிட்டு அர்ஜூன் தாஸ் அல்லது டோவினோ தாமஸ் என யாரேனும் ஒருவரை நடிக்க வைக்கலாம் எனக்கூறினாராம். ஆனால், அஜித் அதை ஏற்கவில்லை.
இதையும் படிங்க: விஜய் படத்திலிருந்து ஏன் விலகினார் அஜித்?… 24 வருடம் கழித்து வெளியான தகவல்
என் படத்தில் நடிக்கும் ஆர்வத்துடன் அவர் வந்துவிட்டார். தற்போது அவரை நீக்கினால் அவர் கஷ்டப்படுவார். அந்த வலி எனக்கு தெரியும். எனவே, அவரே நடிக்கட்டும் எனக்கூறிவிட்டாராம்.
அஜித் வளரும் காலத்தில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தாகி பின் நீக்கப்பட்டார். வசந்த் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நேருக்கு நேர்’ படத்தில் கூட சில காரணங்களால் அஜித் விலக அவருக்கு பதில் சூர்யா நடித்தார். அதுதான் சூர்யாவுக்கு முதல் திரைப்படமாகும்.
பல வருடங்கள் ஆகியும் அதையெல்லாம் மறைக்காமல் மற்றவர்கள் மனம் காயப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அஜித்தை பாராட்டித்தான் ஆக வேண்டும்.