Categories: Cinema News latest news

இது எப்போ? எனக்கே புதுசா இருக்குங்க… இனிமே சொல்லிட்டு கிளப்புங்க… ஓபனாக உடைத்த விமல்..

Rumour on Vimal: தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர் நடிகர் விமல். கிராமத்து ஸ்டைலில் இவரின் நடிப்புக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தது. இருந்தாலும் விமலால் கோலிவுட்டில் நிலைத்து நிற்க முடியவில்லை.

இதனையடுத்து அவர் சமீபத்தில் நடந்த துடிக்கும் கரங்கள் விழாவில் பேசிய விமல் முன்பெல்லாம் தோன்ற இடத்தில் கையெழுத்து போட்டு படம் நடித்து கொடுத்தேன். அது எனக்கே பெரிய பிரச்னையாக இருந்தது. தற்போது அதை விட்டுவிட்டேன். யோசித்தே சில விஷயங்களை செய்கிறேன்.

இதையும் படிங்க: ஓஹோ புகழில் அப்பா… பக்காவாக ப்ளான் போட்ட அக்கா… நான் மட்டும் என்ன தொக்கா? சௌந்தர்யா ஸ்கெட்ச்!

திடமாக இருந்த ரோபோ சங்கரின் நிலை பார்த்து பலரும் குடிப்பதை நிறுத்திவிட்டனர். நானே 45 நாட்களாக உங்களால் தான் குடிப்பது இல்லை என ஓபனாக பேசினார். இந்த நிலையில் யூட்யூபர் அந்தணன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில், விமல் தினமும் குடிக்கும் போது கதை கேட்கிறார். சொல்லும் இயக்குனர்களிடம் 2000 ஆயிரம் கொடுத்து விட்டு அப்புறம் பார்க்கலாம் என கிளம்பிவிடுவார் எனக் கூறினார். 

இதனால் அவருக்கு கதை சொல்லவே இயக்குனர்கள் விரும்புவது இல்லை. பல நேரங்களில் விமல் நிதானத்திலே இருந்தது இல்லை என்றும் குறிப்பிட்டார். தற்போது ஒரு பிரஸ் மீட்டில் பேசிய விமல், நான் குடிப்பதை நிறுத்தியே பல நாட்கள் ஆச்சு இப்படி ஒரு வதந்தி என்னை பற்றி பரவுவது அதிர்ச்சியாக இருக்கிறது என்றார்.

இதையும் படிங்க: நீ போ நான் இப்போ வர முடியாது… கறாராக தளபதி68 டீமை கழட்டிவிட்ட தளபதி…

இதை தொடர்ந்து அருகில் இருந்த நடிகர் சௌந்தர் ராஜா பேசும்போது, இப்படிலாம் எப்படி தான் பிரச்னைய கிளப்புறாங்களோ. யூ-ட்யூபரா வருவதற்கே தேர்வு வைக்கணும். இஷ்டத்துக்கு பேசுவீங்களா. ஒரு சிலர் பொய்யான செய்தியை போட்டு நடிகர்கள் பெயரை கெடுக்கின்றனர்.

எங்க மேல பிரச்னை இருந்த அதை நேர்மையாக சொல்லுங்கள். சும்மா நானும் பேசுகிறேன் என எல்லாரும் கிளம்பிவிடுகின்றனர். சிலருக்கு நடிகர்கள் பெயரே தெரிய மாட்டிங்குது. யூ-ட்யூபர்களுக்கும் பெரிய பொறுப்பு இருக்கிறது. அதை அறிந்து நடந்துக்கொள்ளுங்கள் என்றார்.

Published by
Akhilan