பிக்பாஸ் நடிகைக்கு அண்ணனான விமல்... இது அண்ணாத்த பார்ட் 2....!
கோவிவுட்டில் கூட்டத்தில் ஒருவனாக இருந்து, துணை நடிகனாக இருந்து பல போராட்டங்கள், நிராகரிப்புகள், அவமானங்கள் என அனைத்தையும் கடந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் நடிகர் விமல். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான பசங்க படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து வெளியான களவாணி, வாகை சூடவா போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி நடிகராக மாறினார் விமல். ஆனால் சமீபகாலமாக இவரது படங்கள் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இவருக்கு எந்தவித படமும் வெளியாகவில்லை.
தற்போது நடிகர் விமல் சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, குலசாமி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், விமல் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பெயரிடப்படாத இப்படத்தை உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்குகிறார். நாயகனாக விமலும், அவரின் தங்கையாக பிக்பாஸ் பிரபலம் அனித் சம்பத்தும் நடிக்கிறார்கள். தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறதாம்.
பாண்டியராஜ், ஆடுகளம் நரேன், பாலசரவணன், தீபா, நேகா ஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோலிவுட்டில் இறுதியாக தங்கச்சி செண்டிமெண்ட்டை வைத்து வெளியான அண்ணாத்த படத்தை போலவே இந்த படத்தின் கதையும் தங்கச்சி செண்டிமெண்ட்டை வைத்து உருவாகி வருகிறது.