பல கோடி சொத்து அபேஸ்.. இப்படி ஒரு நிலைமையா? வருத்தத்தில் விமல்

by Rohini |   ( Updated:2025-04-19 06:32:43  )
vimal
X

vimal

Vimal: பசங்க, களவாணி போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் விமல். அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட். அதைத்தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூடவா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் அவர் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்திருக்கிறார். அவருடைய ஆரம்ப காலகட்டத்தில் கில்லி, கிரீடம் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் விமல்.

விஜய், அஜித் இவர்கள் பின்னாடி இருக்கும் ஒரு கேரக்டரில் தான் இந்த படங்களில் நடித்திருந்தார் .அதன் பிறகு தான் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தில் மீனாட்சி சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார் .இந்த திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.

அதைப்போல அவர் நடித்த வாகை சூடவா திரைப்படமும் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. இந்த வகையில் இந்த 20 ஆண்டுகளில் தேசிய விருது பெற்ற படங்களில் அதிகம் நடித்த ஒரே தமிழ் நடிகர் விமல் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார் விமல். அவர் நேரடியாக தேசிய விருதை வாங்கவில்லை என்றாலும் அவர் நடித்த படங்கள் தேசிய விருதை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த விமலுக்கு விலங்கு என்ற சீரிஸ் ஒரு பெரிய கம்பேக்கை கொடுத்தது. அந்த வெப் சீரிஸ் நல்ல ஒரு வரவேற்பை பெற்றதுடன் மீண்டும் அவருக்கு படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் நடிகர் விமலை பற்றிய ஒரு தகவல் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.

பல கோடி சொத்துக்களை நான் இழந்து இருக்கிறேன் என விமல் கூறியது இப்போது ஒரு ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. அவர் நடித்த மஞ்சப்பை படத்திற்கு பிறகு எந்த ஒரு வெற்றி திரைப்படமும் அவருக்கு அமையவில்லை. அதனால் மன்னர் வகையறா என்ற படத்தை அவரே தயாரித்து அதில் நாயகனாகவும் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை. அந்த படத்திற்காக அவர் சினிமாவில் சம்பாதித்து இருந்த பல கோடி ரூபாய் சொத்துக்களை இழந்திருக்கிறாராம் விமல்.

Next Story