கோலிவுட்டில் உள்ள நடிகர்களில் ஒருவர் விமலும் ஒருவர். திருச்சி மணப்பாறையை சேர்ந்த விமல் நடிகராகும் ஆசையில் சென்னை வந்து கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்தவர். நடிகர் விஜய் சேதுபதி, விமல் எல்லாம் கூத்துப்பட்டறையில் ஒன்றாக பயிற்சி எடுத்தவர்கள்.
அதன்பின் கில்லி உள்ளிட்ட பல படங்களிலும் கூட்டத்தில் ஒருவராக நிற்கும் சின்ன சின்ன வேடங்களில் விமல் நடித்திருக்கிறார்.
2009ம் வருடம் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படம் மூலம் சினிமாவில் நடித்த தொடங்கினார். அதன்பின் விமல் நடித்த களவாணி திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. இந்த படம் மூலம்தான் ஓவியா சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விமலுக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.

தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, மஞ்சப்பை, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.
அவற்றில் தேசிங்கு ராஜா உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது. இடையில் சொந்தமாக படங்களை தயாரித்து பல கோடி நஷ்டமும் அடைந்தார்.
கடந்த சில வருடங்களாகவே விமலுக்கு சரியான வெற்றிப்படம் அமையவில்லை. அவரும் தொடர்ந்து நடித்து வந்தாலும் எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில் 2025ம் வருடம் அவரின் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே தோல்வி அடைந்திருக்கிறது.
படவா, பரமசிவன் பாத்திமா, தேசிங்கு ராஜா 2, மகாசேனா போன்ற படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன.