கதை சொல்ல வந்தா இப்படியா?!... காரில் ஜல்ஷா பண்ணி மார்க்கெட்டை இழந்த விமல்!..

by சிவா |
vimal
X

மதுரையை சேர்ந்த விமல் கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்தவர். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார். நக்கல், நய்யாண்டியுடன் அவர் பேசும் மதுரை பாஷை ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. சற்குணம் இயக்கத்தில் அவர் நடித்த களவாணி திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. வாகை சூடவா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

களவாணி திரைப்படத்தில் மிகவும் இயல்பாக நடித்ததோடு, காமெடியும் செய்து கலக்கியிருப்பார். ஓவியா நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ஆனால், அடுத்தடுத்து அவர் நடித்த பல படங்கள் வரவேற்பை பெறவில்லை. சிவகார்த்திகேயனுக்கு முன்பே இவர் பெரிய நடிகராக இருந்தார். இவரின் பட விழாவில் சிவகார்த்தியான் ஆங்கராக இருந்த சம்பவம் கூட நடந்தது.

இதையும் படிங்க: எல்லாரும் ஏமாத்திட்டாங்க!.. சரக்கடிச்சி பல நாள் ஆச்சி!.. மேடையில் புலம்பிய விமல்!…

ஆனால், இப்போது சிவகார்த்திகேயன் எங்கோ இருக்க விமல் மார்க்கெட் போன நடிகராக மாறியுள்ளார். அதற்கு காரணம் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காதது மட்டுமல்ல.. அவரிடமிருந்த நிறைய கெட்டப்பழக்கங்கள்தான். மதுப்பழக்கம் உள்ள விமல் அதனாலேயே பட சறுக்கல்களை சந்தித்தார் என சொல்லப்படுகிறது.

மன்னர் வகையறா படத்துக்காக சில கோடிகள் கடன் வாங்கி அப்படத்தை சொந்தமாக தயாரித்தார். ஆனால், அந்த படம் வெற்றி பெறாமல் போனதால் கடனில் சிக்கினார். அதன்பின் விமல் இதுவரை எழுந்திருக்கவே முடியவில்லை. அவர் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றியை பெறவில்லை. இடையில் விலங்கு வெப்சீரியஸ் மட்டும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

விமலுக்கு ஒரு பழக்கம் இருந்ததாம். அவர் பீக்கில் இருந்த போது அவரிடம் கதை சொல்ல உதவி இயக்குனர்கள் வந்தால் கதையை கேட்காமல் இழுத்தடிப்பாராம். காரை எடுத்துக்கொண்டு சாலிகிராமம் பக்கம் சென்று இவரிடம் கதை சொல்ல வந்த யாராவது கண்ணில் பட்டால் ‘உங்க கதைய கேட்குறேன்.. காருல ஏறுங்க’ என சொல்லி காரில் ஏற்றுக்கொண்டு ஜாலியாக ரவுண்டு வருவாராம்.

இதையும் படிங்க: இந்நேரம் விமல் நிலைமைதான் எஸ்.கேவுக்கும் ஜஸ்ட்டு மிஸ்.. ப்ளான் போட்டு தப்பித்த சிவகார்த்திகேயன்!..

காரிலேயே ஜாலியாக சரக்கடித்துவிட்டு அவரிடம் மற்ற கதைகளை பேசிவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து அவரை கீழே இறக்கிவிட்டு ‘நேரில் வாங்க.. உங்க கதையை கேட்குறேன்’ என சொல்லிவிட்டு சில ஆயிரம் பணம் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை கொடுத்துவிட்டு போய்விடுவாராம். ஆனால், அதன்பின் அந்த உதவி இயக்குனரால் அவரை தொடர்புகொள்ள முடியாதாம்.

இப்படி தொழிலில் சின்சியாரிட்டியாக இல்லாமல் போனது, மதுப்பழக்கம், சொந்தமாக படம் தயாரித்து கடனில் சிக்கியது, தொடர் தோல்வி படங்கள் ஆகியவற்றின் காரணமாக இப்போது மார்க்கெட்டை இழந்து நிற்கிறார் விமல். துடிக்கும் கரங்கள் என்கிற படம் வருகிற 8ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படமாவது தனக்கு கை கொடுக்கும் என நம்பி காத்திருக்கிறாராம்.

இதையும் படிங்க: யோகிபாபு இப்படி சொல்லுவாருனு எதிர்பாக்கல!. காதல் விமல் பேட்டி…

Next Story