பசங்க திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் விமல். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். சற்குணம் இயக்கிய களவாணி படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றி இவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது.
பல படங்களில் நடித்தார். அதில் பெரும்பலான படங்கள் ஹிட் அடிக்கவில்லை. ஆனாலும், குறைந்த பட்ஜெட்டில் அதிக படங்களில் நடித்த ஹீரோவாக விமல் இருந்தார். மஞ்சப்பை, வாகை சூடவா, தேசிங்கு ராஜா என சில ஹிட் படங்களை கொடுத்தார். ஆனாலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை.
இதையும் படிங்க: இந்நேரம் விமல் நிலைமைதான் எஸ்.கேவுக்கும் ஜஸ்ட்டு மிஸ்.. ப்ளான் போட்டு தப்பித்த சிவகார்த்திகேயன்!..
விமலுக்கு இப்போது இருக்கும் எந்த இளம் நடிகர்களுடன் நட்புறவும் இல்லை. அதுவும் அவருக்கு வாய்ப்புகள் வராமல் போனதற்கு முக்கிய காரணம் ஆகும். சூரி மட்டுமே இவருடன் நட்பில் இருக்கிறார். ஏனெனில் எல்லாம் ஒரே ஊர் காரார்கள். மன்னவர் வகையறா படம் எடுத்து நஷ்மடைந்து கடன் பிரச்சனையிலும் சிக்கினார் விமல். பின்னர் அதிலிருந்து மீண்டார்.
இந்நிலையில், அவரின் நடிப்பில் உருவாகியுள்ள துடிக்கும் கரங்கள் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய விமல் ‘சினிமாவுக்கு வந்த புதிதில் பலரையும் நம்பி ஏமாந்து போனேன். நிறைய மொக்கை படங்களில் நடித்தேன். இதனால் என் மார்கெட் போய்விட்டது. கொரோனாவுக்கு பின் எனக்கு வாய்ப்பே இல்லாமல் போனது.
இதையும் படிங்க: என் படம் எல்லாம் ஓடாம போனதுக்கு இதுதான் காரணம்… ஓப்பன் டாக் கொடுத்த விமல்!..
அப்போதுதான் விலங்கு வெப் சீரியஸில் நடித்தேன். அது ரசிகர்களுக்கு பிடித்து வெற்றியடைந்ததால் எனக்கு மீண்டும் வாய்ப்புகள் வந்தது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு யாரையாவது கூப்பிடுங்கள் என இயக்குனர் சொன்னார். நான் அழைத்தால் யாரும் வரமாட்டார்கள் என சொன்னேன். இதுதான் இப்போது என் நிலைமை. நான் சரக்கடித்து 45 நாட்கள் ஆகிவிட்டது’ என சோகத்துடன் விமல் பேசியிருந்தார்.
துடிக்கும் கரங்கள் படத்தை வேலுதாஸ் என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிஷாரங் என்பவர் நடித்துள்ளார். மேலும், சதீஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 1ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 17 வருஷத்துக்கு முன்பு சூரி எழுதுன லவ் லெட்டர்..- சூரியை மிரள வைத்த விமல்!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…