இறந்து போன என் தம்பி மாதிரியே இவன் இருக்கான் ! மேடையில் கலங்கிய விமல்.!

Published on: February 17, 2022
---Advertisement---

நம்ம ஊர் கிராமத்து இளைஞர்களை அப்படியே கண்முன் கொண்டு வந்த ஒரு சில நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விமல். இவர் நடித்த பசங்க, களவாணி போன்ற ஒரு சில திரைப்படங்கள் அப்படியே நம்ம ஊர் இளைஞர்களை கண் முன் நிற்க வைத்தது போல் தத்ரூபமாக இருக்கும்.

ஆனால், ஏனோ அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்து கடந்த 2,3 வருடங்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார் விமல்.

தற்போது சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த முறை வெப்சீரிஸ் பக்கம் தன் கவனத்தை செலுத்தியுள்ளார். விலங்கு என பெயரிடப்பட்டுள்ள அந்த வெப் சீரிஸ் ஜீ தமிழ் OTT பிளாட்பார்மில் வெளியாக உள்ளது.

இதையும் படியுங்களேன் – தளபதி66 பட இயக்குனரை பாடாய்படுத்திய சிவகுமார் குடும்பம்.! இன்னும் வேற யாரு இருக்காங்க.?!

இந்த வெப் சீரிஸ்க்கான விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விமல், மிகவும் உணர்ச்சிவசமாக பேசினார். அப்போது அவர் நடிகர் பாலசரவணன் அவரை குறிப்பிட்டு இவர் எனது இறந்துபோன தம்பியை போல உள்ளார். என மிகவும் உணர்ச்சிவசமாக பேசினார்.

இவரின் தம்பி ஆறு வயதில் உயிரிழந்து விட்டாராம். அந்த புகைப்படத்தை பார்த்து அந்த புகைப்படத்தையும் பாலசரவணன் முகத்தையும் ஒப்பிட்டு இறந்துபோன தம்பியை போல அப்படியே இருக்கிறான். என உணர்ச்சி வசமாக பேசினார். அதனால் எனக்கு ஒரு தம்பி கிடைத்து விட்டான் என்றும் குறிப்பிட்டு பேசினார்.

மேலும், இது என்னுடைய ரீ-என்ட்ரி இனிமேல் நான் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு பிடித்ததாக மட்டுமே இருக்கும் என தெரிவித்தார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment