Cinema News
என் படம் எல்லாம் ஓடாம போனதுக்கு இதுதான் காரணம்… ஓப்பன் டாக் கொடுத்த விமல்!..
2010 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த களவாணி திரைப்படம் முதன் முதலாக டெல்டா பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறையை அடிப்படையாக கொண்டு வெளியானது. இந்த படம் இயக்குனர் சற்குணம், விமல், பரோட்டா சூரி என பலருக்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
அதன் பிறகு விமலின் மார்க்கெட் பெரும் அளவில் வளர்ந்தது. வரிசையாக பட வாய்ப்புகளை பெற்றார் விமல். ஆனால் அதற்கடுத்து நடித்த பல படங்கள் வரிசையாக தோல்வியை கண்டன. அப்போது சிவகார்த்திகேயனை விட பெரும் மார்க்கெட்டில் இருந்தார் விமல்.
ஆனால் சரசரவென சரிந்து அதன் பிறகு அவரை விட சிவகார்த்திகேயன் பெரும் மார்க்கெட்டை பிடித்தார். அதிலும் அவர் நடித்த இஷ்டம் என்கிற திரைப்படம் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானது. விமலுக்கு ஆங்கில உச்சரிப்பு அவ்வளவாக வராது. இதனால் அப்போது அவர் பேசிய பல வசனங்கள் விமர்சனத்துக்கு உள்ளானது.
நம்பி மோசம் போன விமல்:
இதுக்குறித்து விமல் ஒரு பேட்டியில் கூறும்போது சற்குணம் ஒரு நல்ல இயக்குனர். நான் அவரை போலவே மற்ற இயக்குனர்களும் இருப்பார்கள் என நினைத்தேன். சில இயக்குனர்கள் வாயிலேயே நன்றாக கதை சொல்வார்கள். ஆனால் படம் எடுக்க தெரியாது. ஆனால் சில இயக்குனர்கள் பேசவே மாட்டார்கள் ஆனால் நன்றாக படம் எடுப்பார்கள்.
இதெல்லாம் தெரியாமல் பல இயக்குனர்களிடம் நான் பட வாய்ப்பை கொடுத்தேன். அவர்களுக்கெல்லாம் படம் எடுக்க தெரியாமல் என் மார்க்கெட்டை காலி செய்துவிட்டனர். இயக்குனர்களை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை லேட்டாகதான் புரிந்துக்கொண்டேன் என கூறியுள்ளார் விமல்.
இதையும் படிங்க: சொந்த வீட்டுக்குள்ளயே திருட்டுத்தனமாதான் வருவார் விஜய்! – இது புது நியூஸா இருக்கே!..