விமலை வில்லனாக வைத்து எழுதின கதை… ஆனா நடந்ததே வேற!.. எந்த படம் தெரியுமா?

vimal
தமிழ் சினிமாவில் பசங்க திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் விமல். சினிமாவிற்கு அப்போது வாய்ப்பு தேடி வந்த பல இளைஞர்களில் நடிகர் விமலும் முக்கியமானவர்.
பசங்க திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த களவாணி திரைப்படம் விமலின் மார்க்கெட்டை அதிகரிக்க செய்தது. ஆனால் அதற்கு பிறகு அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை கொடுத்ததை அடுத்து மார்க்கெட்டை இழந்தார் விமல்.

Vimal
சினிமாவிற்கு நடிக்க வருபவர்கள் யாருமே எடுத்த உடனே திரைப்படங்களில் நடிக்க துவங்குவதில்லை. சில காலங்கள் அவர்கள் நடிப்பு பயிற்சி பட்டறையில் பயிற்சி எடுப்பார்கள். அப்போது ரஜினிகாந்தில் துவங்கி இப்போது உள்ள பல நடிகர்கள் வரை பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்களே திரைக்கு அதிகமாக வருகின்றனர். ஆரம்பத்தில் நடிகர் விமலும் கூட பயிற்சி பட்டறையிலேயே பயிற்சி பெற்று வந்தார்.
விமலுக்கு வந்த வாய்ப்பு:
அந்த சமயத்தில்தால் அவருக்கு பசங்க படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பசங்க படத்திற்கு பிறகு அவர் நடித்த திரைப்படம் களவாணி. விஜய் சேதுபதியை பெரிதாக தூக்கிவிட்ட திரைப்படம் என களவாணி. ஆனால் அந்த படத்தில் முதலில் விமலை வில்லனாக நடிக்க வைக்கதான் தீர்மானித்திருந்தனர்.

kalavani
அதில் வரும் கதாநாயகியின் அண்ணன் கதாபாத்திரத்தில் விமல் நடிக்க இருந்தார். ஆனால் படத்தின் ஹீரோவோடு ஏற்பட்ட சண்டையால் பிறகு விமலை படத்தின் கதாநாயகனாக மாற்றினர். இல்லையெனில் களவாணி திரைப்படத்தில் வேறு நபர்தான் ஹீரோவாக நடித்திருப்பார்கள்.
இதையும் படிங்க: விட்டுப் போன உறவு! எப்படி ஒட்ட வைத்தார் தெரியுமா? இயக்குனருக்கு மறுவாழ்வு கொடுத்த எம்ஜிஆர்