நயன்தாரா மேல இவ்வளவு லவ்வா?!.. பிரதீப் படத்துக்கு வாங்கிய அட்வான்ஸில் விக்கி செய்த வேலை!..

by சிவா |   ( Updated:2024-03-06 07:56:14  )
nayan
X

நானும் ரவுடிதான் படம் உருவானபோதே நயன்தாராவுக்கும் அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது எல்லோருக்கும் தெரியும். அதன்பின் சில வருடங்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஒருகட்டத்தில் ஒருவரும் லிவ்விங் டூ கெதர் போலவே வாழ்ந்து வந்தனர்.

இருவரும் ஜாலியாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று நேரம் செலவிடுவது, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது, நயனின் பிறந்தநாளுக்கு காதலுடன் வாழ்த்து சொல்வது, அவரை சர்ப்பரைஸ் செய்வது அதேபோல், விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வந்தால் நயன் அவருக்காக உருகி வாழ்த்து தெரிவிப்பது என ஒரே ரொமான்ஸாக இருந்தது.

இதையும் படிங்க: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க போவது இந்த முன்னணி நடிகரின் மகனா? இது வேற ரூட்டால இருக்கு!..

சில வருடங்களுக்கு முன்பு இருவரும் முறையாக திருமணமும் செய்து கொண்டார்கள். அதோடு, வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கும் இருவரும் பெற்றோர் ஆனார்கள். அதன்பின் குழந்தைகளுடன் இருவரும் நேரம் செலவழிக்கும் புகைப்படங்களையும் இருவரும் வெளியிட்டு வந்தனர்.

திருமணத்திற்கு பின்னரும் நயன்தாரா சினிமாவில் நடித்து வருகிறேன். அதேநேரம், குழந்தைகளை பிரிய முடியாது என்பதால் சென்னையில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஒருபக்கம் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

இதையும் படிங்க: ஷங்கர்கிட்ட இன்னமும் அது இருக்கானு தெரியல! இருந்தால் நல்லது.. நாசர் சொன்ன சீக்ரெட்

இந்த படத்தை லியோ பட தயாரிப்பாளர் செவன் கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்காக அட்வான்ஸ் வாங்கிய தொகையில் நயன்தாராவுக்கு ரூ.4.50 கோடி மதிப்பில் ஒரு மெர்சிடஸ் பென்ஸ் காரை பரிசாக வாங்கி கொடுத்துள்ளாராம் விக்கி.

முன்பெல்லாம் நயன்தாராதான் விக்கிகு அதிக பரிசு கொடுப்பாராம். ஆனால், இப்போது நாலரை கோடி மதிப்புள்ள காரை அவருக்கு பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார் விக்கி.

Next Story