தல அஜித்துக்கு இவ்வளவு தங்க மனசா?...வலிமை இயக்குனர் வினோத் பகிர்ந்த ரகசியம்...
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் வினோத். தற்போது மீண்டும் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கியுள்ளார். குற்றங்களை செய்யும் கும்பலுக்கும் இடையே நடக்கும் மோதலே இப்படமாகும்.இப்படம் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த வினோத் வலிமை பற்றியும், அஜித் பற்றியும் பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
இப்படம் ஒரு போலீஸ் அதிகாரிக்கும், பைக்கில் சென்று பல படப்பிடிப்பு துவங்கும் முன் ‘இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிக்கிறீர்கள். அது நீங்கதான்னு ரசிகர்களுக்கு தெரியனும். ஹெல்மெட்டை கழட்டிவிட்டு பைக் ஓட்டுகிறீர்களா?’ எனக்கேட்டேன். ஹெல்மெட் போட்டுத்தான் பைக் ஓட்டணும். சினிமாவுக்காக ரூல்ஸை மாத்தக்கூடாது’ எனக்கூறி மறுத்துவிட்டார்.
ஒரு காட்சியில் ஹாரன் அடித்துக்கொண்டே காரை ஓட்ட சொன்னேன் .அதற்கு ‘ஹாரன் அடிக்கிறது நியூசென்ஸ். குழந்தைகள் வயசானவங்க பதறுவார்கள். நல்லா வண்டி ஓட்ட தெரிஞ்சவங்க ஹாரன் அடிக்க மாட்டாங்க’ எனக் கூறினார். அவர் எப்போதும் மற்றவர்கள் பற்றியே யோசிக்கிறார் என அந்த பேட்டியில் வினோத் கூறியுள்ளார்.
ஹெல்மெட் கட்டாயம் என்பது எப்போது அமுலுக்கு வந்ததோ, தன்னை தன் ரசிகர்களும் பின் பற்றுவார்கள் என்பதால் ஹெல்மெட் அணியாமல் அஜித் சினிமாவில் கூட பைக் ஓட்டுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.