ஒரே படம்தான்.. சமுத்திரகனிக்கு ஏற்பட்ட சூப்பர் மாற்றம்
விநோதய சித்தம் படத்தை இயக்கி நடித்துள்ள சமுத்திரக்கனி, கிடைத்த வரவேற்பால் மிகவும் பூரித்துப் போயிருக்கிறார். இந்த படம் சமுத்திரக்கனிக்கு உளவியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாம். இனி பேச்சைக் குறைக்க முடிவு செய்துவிட்டாராம்.
'விநோதய சித்தம்' என்ற படத்தை சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் தயாரித்துள்ளார். தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், பாலாஜி மோகன், அசோக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விநோதய சித்தம் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பலரும் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படம் குறித்து சமுத்திரக்கனி கூறும்போது, "'விநோதய சித்தம்' படத்தில் நடித்த பிறகு உளவியல் ரீதியாக எனக்குள் மாறுதல் ஏற்பட்டது. இனி பேச்சைக் குறைக்க முடிவு செய்துவிட்டேன் என்றார்.
18 ஆண்டுகளுக்கு முன்பு கே.பாலசந்தர் சாருடன் நாடகம் ஒன்று பார்த்ததாகவும் . அதிலிருந்து உருவானது தான் 'விநோதய சித்தம்' படம் என்றும் சமுத்திரக்கனி கூறினார்.
பாலுமகேந்திரா சார் சொன்னபடி ஒரு சாதாரண கதையை இயக்குநர் இயக்குவான். ஒரு நல்ல கதை இயக்குநரை இயக்கும். அதுபோல இந்தப் படம் எல்லோரையும் இயக்க வைத்து நல்ல படமாக அமைந்துள்ளது.
இந்த படம் பார்த்தால் கண்டிப்பாக உளவியல் ரீதியாகச் சிறு மாற்றத்தை உணர்வீர்கள். நான் படைத்த படைப்புகளில் இதுதான் சிறந்த படைப்பாக என் மனமார நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார் .
இந்த படத்தை பார்த்த பலரும் இதைவிட வாழ்க்கையை யாரும் அற்புதமாக சொல்லிவிட முடியாது. வாழ்க்கை என்பது உயிர் பிரியும் வரை மட்டுமே.. அற்புதமான வார்த்தை வடிவம் கொண்ட படம் . மனதிற்கு நிறைவான குடும்பமாக பார்க்கக் கூடிய படம் என்று பலரும் பாராட்டுகிறார்கள். இந்த பாராட்டுகளை கேட்டு சமுத்திரகனி மிகவும் பூரித்துப் போயிருக்கிறார். உண்மையிலேயே இந்த விநோதய சித்தம் ஒரு தரமான பட வரிசையில் இடம்பெறும் என்று சினிமா வட்டாரத்தில் பலரும் பாராட்டுகிறார்கள்.