96 படத்தில் தவறவிட்ட வாய்ப்பு- இவர் மட்டும் நடிச்சிருந்தா?… வருத்தத்தை பகிர்ந்த பொன்னியின் செல்வன் நடிகை…

Published on: March 29, 2023
96
---Advertisement---

கடந்த 2018 ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “96”. ரசிகர்கள் பலரின் மனதில் ஒரு ஃபீல் குட் திரைப்படமாக இப்போதும் திகழ்ந்து வருகிறது இத்திரைப்படம். குறிப்பாக 1990களில் பள்ளிப்பருவத்தில் இருந்தவர்களின் பழைய இனிமையான நினைவுகளை கிளறுவது போல் இத்திரைப்படம் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்ததாக பலரும் கூறிவந்தனர்.

96
96

அவர்களுக்கு மட்டுமல்லாது தற்கால தலைமுறைக்கும் இத்திரைப்படம் மிகவும் உருக்கமான காதல் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை பிரேம் குமார் இயக்கியிருந்தார். கோவிந்த் வசந்தா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்களை கட்டிப்போட்டது. “கரை வந்த பிறகே”, “இத்யாதி காதல்” போன்ற பாடல்கள் இசை ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு இத்திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் ரசிக்கத்தக்கதாக அமைந்தது.

தேவதர்ஷினி கதாப்பாத்திரத்தில் நான்…

இத்திரைப்படத்தில் பிரபல நடிகை தேவதர்ஷினி மிக முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது யதார்த்த நடிப்பு ரசிகர்கள் பலரையும் கவரும் வண்ணம் இருந்தது.

Devadarshini
Devadarshini

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட துணை நடிகை விநோதினி, “96” திரைப்படத்தில் தேவதர்ஷினி கதாப்பாத்திரத்தில் தான் நடிக்க இருந்ததாக ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Vinodhini
Vinodhini

இது குறித்து அப்பேட்டியில் பேசிய விநோதினி, “96 திரைப்படத்தில் தேவதர்ஷினி கதாப்பாத்திரத்தில் நடிக்க என்னைத்தான் முதலில் கேட்டார்கள். ஆனால் என்னால் கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை. த்ரிஷா மேடம் அவர்களின் கால்ஷீட் நாட்களும் என்னுடைய கால்ஷீட் நாட்களும் சரிவர ஒத்துவரவில்லை. நான் ஏற்கனவே லண்டன் போக திட்டமிட்டிருந்தேன். என்னால் அந்த பயணத்தை தவிர்க்கமுடியவில்லை” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: இந்த உண்மை சம்பவத்தைத்தான் வெற்றிமாறன் படமாக்கியுள்ளார்… சர்ச்சைக்குள் சிக்குமா விடுதலை?

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.