வலிமை படத்தில் அஜித்துக்கு அது இல்லையாம்... அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்...

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. ஒன்றரை வருடங்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு சமீபத்தில்தான் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இப்படம் துவங்கியது முதலே இப்படம் தொடர்பான எந்த அப்டேட்டையும் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அஜித் ரசிகர்களுக்கு தெரிவிக்கவில்லை. அப்டேட் கேட்டு கேட்டு ஒருகட்டத்தில் அவர்கள் ஓய்ந்தே போனார்கள்.
தற்போது இப்படம் வரும் பொங்கலன்று வெளியாகும் என போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். முதலில் இப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாகும் என செய்திகள் கசிந்தது. அதன்பின், இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இரண்டும் இல்லாமல் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு சென்றுவிட்டது.
துவக்கம் முதலே இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்கிற கேள்வி ரசிகர்களின் மனதில் இருந்து வந்தது. பேட்ட படத்தில் ரஜினியின் காதலியாக நடித்தவர் ஹியூமா குரோஷி. அவர்தான் வலிமை படத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்துவிட்டது. ஆனால், அவர் அஜித்துக்கு ஜோடியா என்பது தெரியாமல் இருந்தது.
இதையும் படிங்க: ஜோதிகாவை விட மவுசு குறைஞ்சு போச்சா!.. இது என்னடா ரஜினிக்குகு வந்த சோதனை!…
இந்நிலையில், இதுபற்றி ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ள வலிமை பட இயக்குனர் வினோத் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி என யாருமில்லை. ஹியூமா அவரின் தோழியாக மட்டுமே நடித்துள்ளார் என அதிர்ச்சி கொடுத்துள்ளார். பல வருடங்களுக்கு பின் ஜோடி இல்லாமல் அஜித் நடிக்கும் படமாக வலிமை உருவாகியுள்ளது.