Connect with us

வலிமை படத்தில் அஜித்தின் வேடம் ஒரு உண்மை கதை – ரகசியம் கூறும் வினோத்

ajith in valimai

Cinema News

வலிமை படத்தில் அஜித்தின் வேடம் ஒரு உண்மை கதை – ரகசியம் கூறும் வினோத்

விஸ்வாசம் படத்திற்கு பின் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படம் பற்றி சமீபத்தில் பேசிய இயக்குனர் வினோத் ‘மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஒரு பைக் ரேசருக்கு நேரிடையாக எஸ்.ஐ பணி கொடுத்தார். அதை இன்ஸ்பிரேஷனாக கொண்டே அஜித்தின் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு புரபஷனல் பைக் ரேசர் போலீஸ் அதிகாரியாக மாறினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைதான் அஜித்தின் வேடம்’ என தெரிவித்தார்.

மேலும், வலிமை படத்தின் கதை வேறு எந்த ஹீரோவை மனதில் வைத்தும் நான் உருவாக்கவில்லை. வலிமை கதையை எழுதிய பின் அஜித்துக்காக சில மாற்றங்களை செய்தேன் என தெரிவித்தார்.

வலிமை படத்தின் விசில் தீம் இசை சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Continue Reading
To Top