பாட்டுக்கு பாடாய் படுத்திய யுவன்... கடுப்பில் வலிமை இயக்குனர் எடுத்த முடிவு.....
அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை ரிலீஸ் தள்ளி சென்றுவிட்டது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆனால், இப்படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் ஜிப்ரான் செய்துள்ளார். இந்த முடிவை இப்படத்தின் இயக்குனர் வினோத் ஏன் எடுத்தார் என்கிற கேள்வி அஜித் ரசிகர்களுக்கு இருக்கிறது. தற்போது அதற்கான் காரணங்கள் தெரியவந்துள்ளது.
பொதுவாக யுவன் சங்கர் ராஜா அவ்வளவு சீக்கிரத்தில் பாடல்களை கொடுத்துவிட மாட்டார். அவருக்கு எப்போது மூடு வருகிறதோ அப்போதுதான் இயக்குனர்களுக்கு ட்யூன் கிடைக்கும். அவரை தொடர்பு கொள்வடும் அவ்வளவு சுலபம் இல்லை. பாடல்களுக்கு பல மாதங்கள் இழுத்தடிப்பார். இதன் காரணமாகத்தான் பல முன்னணி இயக்குனர்கள் அவரை விட்டு விலகினர். அஜித் கூறியதால்தான் வலிமை படத்திற்கு யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கம்போல் பாடல்களை கொடுக்க வினோத்தை பாடாய் படுத்தியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. ஒரு பாடலுக்கு இசையமைக்க ஒன்றரை மாதமெல்லாம் எடுத்துக்கொண்டாராம். இத்தனைக்கும் வலிமை படத்தின் பாடல்கள் பெரிய ஹிட் அடிக்கவில்லை. அதிலும் பெரிதும் எதிர்பார்த்த அம்மா செண்டிமெண்ட் பாடல் கூட பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.
ஒருபக்கம், வலிமை படத்திற்கு யுவன் அமைத்த பின்னணி இசையில் வினோத்துக்கு திருப்தி ஏற்படவில்லை. அதோடு, அவரை தொடர்பு கொள்வதே அவருக்கு பெரிய பிரச்சனையாக இருந்துள்ளது. எனவேதான், ஜிப்ரானை வைத்து பின்னணி இசையை முடித்துள்ளார் வினோத் என்பது தெரியவந்துள்ளது. ஏனெனில் வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு அசத்தலான பின்னணி இசையை ஜிப்ரான் இசையமைத்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படியோ, யுவன் சங்கர் ராஜா படுத்திய பாட்டால் அவரின் பின்னணி இசையில் படத்தை காண ஆவலுடன் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியாக முடிந்துள்ளது.