Connect with us

ஒரு பெண்ணை பிடித்துவிட்டால் அந்த உறவுக்கு அழைப்பேன்.! விஷால் பட நடிகர் சர்ச்சை பேட்டி….

Cinema News

ஒரு பெண்ணை பிடித்துவிட்டால் அந்த உறவுக்கு அழைப்பேன்.! விஷால் பட நடிகர் சர்ச்சை பேட்டி….

தற்போது இந்திய சினிமா உலகில் நடந்த மீடூ ((METOO) பிரச்சினைகள் அதிகமாக தற்போது வெளியுலகத்துக்கு வர தொடங்கியுள்ளன. ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது குறித்து தற்போது பலரும் வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர்.

இந்த சமயத்தில் ஒரு நடிகர் தனது சர்ச்சை பேச்சு மூலம் புது புயலை கிளப்பியுள்ளார். அவர் வேறு யாருமல்ல, திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான விநாயகம் எனும் மலையாள நடிகர் தான். இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகராக உள்ளார்.

இவர் அண்மையில் அளித்த பேட்டியில், ‘ எனக்கு மீடூ ((METOO) பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. எனக்கு ஒரு பெண்ணை பிடித்து இருந்தால், அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் உறவு கொள்ள சம்மதமா என்று கேட்டு விடுவேன். அப்படி அந்தப் பெண் சம்மதம் தெரிவித்து விட்டால் அந்த பெண்ணுடன் உறவு கொள்வேன்.’ என வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுவும் படியுங்களேன் – யாருக்கும் தெரியாத ரஜினியின் இன்னொரு முகம் இதுதான்….கேட்டா ஷாக் ஆவீங்க!…

இவரது இந்த பேச்சுக்கு கேரளாவில் பல மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இவர் ஏற்கனவே பெண்களைப் பற்றி தவறாக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி காவல்துறையினர் கைது செய்து ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் கைது செய்து ஜாமீனில் வெளி வந்தும், தற்போதும் அவர் மீண்டும் சர்ச்சை பேச்சுகளை பேசி வருகிறார் என்று கேரள சினிமா உலகத்தில் முணுமுணுத்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top