விருமன் படத்தை ரிஜெக்ட் செய்த மூன்று இளம் நாயகிகள்... யார் யார் தெரியுமா?
கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தனது வெற்றி படமான கொம்பன் பட இயக்குனர் முத்தையா உடன் இரண்டாவது முறையாக விருமன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தேன்மொழி என்ற கேரக்டரில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நாயகியாக நடித்து வருகிறார். ஆனால் அதிதி விருமன் படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட முதல் நடிகை கிடையாதாம். அவருக்கு முன்னதாக மூன்று டாப் நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள்.
அதன்படி தற்போது பல படங்களில் பிசியாக வலம் வரும் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய்பல்லவி ஆகிய மூன்று இளம் நடிகைகளிடம் தான் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். ஆனால் அவர்கள் வேறு சில படங்களில் பிசியாக இருப்பதால் அவர்களின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம். அதன் பின்னர் தான் அதிதி சங்கர் இந்த படத்தில் ஓப்பந்தமாகி உள்ளார்.
இந்த தகவலை படத்தின் இயக்குனர் முத்தையா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சாய் பல்லவி ராஷ்மிகா போன்ற முன்னணி நடிகைகளிடம் விருமன் படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கால்ஷீட் காரணமாக மட்டும் தான் அவர்கள் இந்த படத்தை நிராகரித்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் இயக்குனர் முத்தையா கொம்பன், குட்டிப்புலி என தொடர்ந்து ஜாதி ரீதியான படங்களை தான் இயக்கி வருகிறார். அந்த வரிசையில் தற்போது விருமன் படமும் ஜாதி சம்பந்தப்பட்ட படமாகதான் இருக்கும் என்பது படத்தின் போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. இந்த காரணத்திற்காக கூட அந்த நடிகைகள் விருமன் படத்தை நிராகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.