’விருமன்’ படம் ரிலீஸில் திடீர் சிக்கல்...! உதவிக்கரம் நீட்டிய ஆர்.கே.சுரேஷ்...
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் படம் தான் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதீதி சங்கர் நடித்திருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிராமத்து பின்னனியில் உருவான இந்த படத்தை சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி புரடெக்ஷன் தான் தயாரிக்கிறது.
ஏற்கெனவே முத்தையா கார்த்தி கூட்டணியில் கொம்பன் என்ற படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது அதே கூட்டணியில் தான் விருமன் படமும் தயாராகியிருக்கிறது . விருமன் படம் வருகிற வெள்ளிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்ற தகவல் வெளியான நிலையில் திடீர் திருப்பமாக ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
விருமன் படத்தை திருடி தான் 2டி நிறுவனம் தயாரித்துள்ளதாக சில வதந்திகள் பரவி வருகின்றது. ஏற்கெனவே கொம்பன் பட ரிலீஸிலும் இதே பிரச்சினை வெடித்தது. அப்போது சமரசம் செய்து படத்தை வெளியிட்டனர். இதே பிரச்சினை தான் விருமன் படத்திலும் ஏற்பட்டுள்ளது. யாரோ உதவி இயக்குனரின் கதையை தான் திருடி விருமன் படம் உருவாகியிருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமாகிய ஆர்.கே. சுரேஷ் மற்றும் கார்த்தி சம்பந்தப்பட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனராம்.