சித்தப்பாவுக்கு பெரிய ஆப்பா வைச்சிட்டாரே நம்ம கார்த்தி.!? விஷயத்தை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்...

தமிழ் சினிமாவின் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தரமாக தேர்வு செய்து, அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் கார்த்தி. அவரது முதல் படமான பருத்தி வீரனிலேயே அதனை சிறப்பாக செய்து முடித்திருப்பார் கார்த்தி. அதில் கார்த்தியின் சித்தப்பவாக நடிகர் சரவணன் நடித்திருப்பார்.
பருத்திவீரன் படத்தில் இவர்கள் இருவரது காம்பினேஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது வரை தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது.
ஏதோ சில காரணத்தால் கார்த்தியின் விருமன் படத்தில் நடிக்க சரவணனை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என கார்த்தி கூறிவிட்டாராம். அதாவது விருமன் திரைப்படத்தில் கருணாஸ் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் இயக்குனர் தேர்வு செய்து இருந்தது நடிகர் சரவணன் அவர்களைத்தானாம்.
விருமன் திரைப்படம் பருத்திவீரன் கதைக்களம் போல கிராமத்து பின்னணியில் உருவாகி இருப்பதால், ஒருவேளை மீண்டும் சரவணன் விருமனில் இணைந்தால், பருத்திவீரன் சாயல் வந்து விடுமோ என நினைத்து கார்த்தி வேண்டாம் என்று சொல்லிவிட்டாரா, இல்லையென்றால் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று பலரும் பலவிதமாக கிசுகிசுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்களேன் - கைவசம் நிறைய தொழில் வச்சிருக்கீங்களே சார்.? சூர்யாவின் புது புது பிசினஸ் சீக்ரெட் லிஸ்ட் இதோ....
விருமன் திரைப்படத்தில் சரவணன் நடித்து இருந்தால், நிச்சயம் அது அவருக்கு, அவரது சினிமா வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கும். ஏன் என்றால் தற்போது அவர் எந்த படத்திலும் அவ்வளவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விருமன் போன்ற பெரிய படத்தில் நடித்து இருந்தால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து இருக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.